ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அஷ்வினை விட இவரே சரியாக இருப்பார் – இயான் சேப்பல் கணிப்பு

Chappell
- Advertisement -

இந்திய அணி வரும் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. பல மாற்றங்கள் முடிவுகளுக்குப் பிறகு இந்த தொடர் நடக்க உள்ளது. பெரும்பாலும் ரசிகர்கள் இல்லாமலேயே இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IndvsAus-1

சென்ற வருடம் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தபோது இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது. இதற்கு இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிதும் உதவினார்கள். ஆகையால் அதற்கு பழிதீர்க்கும் விதமாக இத்தொடரை அவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் ஷர்மா போன்றோர் பட்டையைக் கிளப்பினார்கள். இந்நிலையில் இந்த முறை இவர்கள் யாரும் ஆஸ்திரேலியாவிற்கு தொல்லை கொடுக்க மாட்டார்கள் எனவும், இந்தியாவின் இளம் பந்து வீச்சாளர் ஒருவர் தான் ஆஸ்திரேலியாவிற்கு பெரும் தலைவலியாக இருப்பார் என்றும் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

Kuldeep

இதுகுறித்து அவர் கூறுகையில்… குல்தீப் யாதவ் வீசும் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய மண்ணில் நன்றாக எடுபடுகிறது. இந்திய அணியில் அவரைச் சேர்த்தது மிகவும் தைரியமான முடிவு. ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் ஆடும்போது சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு குழுவினர் தேர்வு செய்ய மாட்டார்கள். அதனை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டார் குல்தீப் யாதவ்.

- Advertisement -

அஸ்வின் பல சாதனைகளை படைத்துள்ளார் இருந்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. அதேநேரத்தில் ரவீந்திர ஜடேஜாவும், அவரைப்போன்று தான். ஆனால் குல்தீப் யாதவவுடைய பந்துவீச்சு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும். அவரது பந்து வீச்சை சற்று தெளிவாக ஆட வேண்டும் இல்லை என்றால் அவ்வளவு தான் இவ்வாறு கூறியுள்ளார் இயன் சேப்பல்.

umesh kuldeep

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் போட்டியும், டிசம்பர் 11ம் தேதி இரண்டாவது போட்டியும், டிசம்பர் 26 ஆம் தேதி 3-வது போட்டியும், ஜனவரி 3 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement