உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என்றால் அது இவர்தான் – இந்திய வீரரை புகழ்ந்த இயான் சேப்பல்

Chappell

சமகாலத்தில் விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என நால்வரும் ஒருவருக்கு ஒருவர் ஒப்பிடப்பட்டு வரும் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். அவ்வப்போது மற்றவர்களுக்கும் அப்பாற்பட்டு அசத்தலாக விளையாடுபவர் விராட் கோலி. இந்த நால்வரில் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பலரும் கூற கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Kohli-4

இதே கருத்தை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல் வழி மொழிந்துள்ளார். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பேசிய அவர் கூறியதாவது : இந்த 4 பேரும் நல்ல வீரர்கள்தான். ஆனால் இந்த நான்கு பேரிலும் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி தான். மூன்று வடிவமான போட்டியிலும் அசத்தலாக ஆடுபவர் அவர் ஒருவர் மட்டும்தான். மூன்று விதமான போட்டிகளிலும் தன்னை எளிதாக மாற்றிக்கொண்டு பட்டையைக் கிளப்புவார் விராட் கோலி.

எனது காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆடியதை போல மிக அருமையாக ஆடுகிறார். அவரது உடல் தகுதி தான் அவரது தனித்துவமான ஒன்று. அதுதான் அவரை மிகச் சிறப்பாக செயல்பட வைக்கிறது. அவர் ரன் ஓடும் வேகம் சில போட்டிகளில் என்னை பிரமிப்படைய வைக்கும். அவரது பிட்னஸ் அவரை மிகச்சிறப்பான வீரராக வைத்துள்ளது.

தோல்வியைக் கண்டு அஞ்சாமல் ஒரு கேப்டனாக போராடுபவர் அவர் தற்போதைய காலகட்டத்தில் ஆகச் சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான். யாருடனும் அவரை ஒப்பிட முடியாது. அவர் தனித்துவமானவர். புத்திசாலியான கிரிக்கெட் வீரர். கேள்வியே இல்லாமல் அவர்தான் மிகச்சிறந்த வீரர் என்று நான் கூறுவேன் இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

Kohli-2

- Advertisement -

அவரின் இந்த கருத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கோலி முக்கிய தொடர்களில் தோல்வியை தழுவினாலும் பெரும்பாலான போட்டிகளில் வெற்றியை குவிக்கிறார். அவர் மட்டும் சரியான அணிய முறையாக வழிநடத்தினால் அவரால் இன்னும் பல முடியும் என்றும் பெரிய கேப்டனாக மாற அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது என்றும் பலரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.