இவர் பிறந்ததே கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக விளையாடுவதற்காக தான் – இந்திய வீரரை புகழ்ந்த சேப்பல்

Chappell
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 2-வது இன்னிங்சின் போது இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பின்னர் விராட் கோலி அணியில் இருந்து வெளியேறியதால் மீதமுள்ள போட்டிகளை எவ்வாறு இந்திய அணி சமாளிக்கப் போகிறது என்ற நிலை உருவானது.

rahane 1

- Advertisement -

ஆனால் அந்த சிக்கலான சூழ்நிலையை கையிலெடுத்த ரஹானே சிறப்பாக இந்திய அணியை கையாண்டு இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தார். அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர் கேப்டனாக செயல்பட உள்ளார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வரும் 7ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கும், ரஹானேவின் கேப்டன்சிக்கும் பல்வேறு முன்னாள் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் ரஹானேவின் கேப்டன்ஷிப்பை மனதார பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2017 ஆம் ஆண்டு அவர் தர்மசாலாவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்திய அணியை வழிநடத்தி இருந்ததை நீங்கள் பார்த்திருந்தால் இது உங்களுக்கு நிச்சயம் புரியும். அவர் கிரிக்கெட் அணிகளை வழிநடத்தவே பிறந்தவர். அண்மையில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் 2017 நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டிக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகின்றன.

Rahane

இரண்டு போட்டிகளிலும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜடேஜாவின் பங்கு அதிகம் இருப்பதை கவனிக்க வேண்டும், அது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதேபோல இரண்டு போட்டிகளிலும் பலமான பாட்னர்ஷிப்பை உடைக்க அறிமுக பந்து வீச்சாளரை பந்து வீச செய்ததில் அவர் மாஸ் காட்டுகிறார். கேப்டன்சி அமைதியான குணத்துடன் அணியை வழிநடத்திச் செல்லும் அவர் துணிச்சல் மிக்கவர்.

Rahane

அதே நேரத்தில் சாந்தமாக போட்டிகளை அணுகி தங்களது ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார் என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஏற்கனவே சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருந்தாலும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இந்த மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement