
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் வென்றது. அந்த வரிசையில் இம்முறையும் ரோஹித் சர்மா தலைமையில் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா சாவியாக இருப்பார்கள் என்று முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முடிந்தளவுக்கு அந்தத் தொடரில் நிறைய வீரர்களை பெரிய காயமின்றி கொண்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்”
“அதனுடைய பெரும்பாலான இலக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோரைப் பற்றியதாக இருக்க வேண்டும். ரிஷப் பண்ட் கார் விபத்திலிருந்து சந்தித்த காயத்திலிருந்து கம்பேக் கொடுத்துள்ள திறன் சிறப்பானது. இந்திய பேட்டிங் வரிசையில் அவர் மிகவும் முக்கியமான விக்கெட் கீப்பர். அவர் தன்னுடைய பவரை ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய உந்துதலை கொடுப்பார்”
“ஒருவேளை நன்றாக செயல்பட முடிந்தால் அவர் தான் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் இந்தியாவுக்கு பொருத்தமான விக்கெட் கீப்பர். அவர் நின்று விளையாடுவதே ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு தேவை. உங்களுக்கு விக்கெட்டின் இருபுறமும் நிறைய பகுதிகளை கடக்கக்கூடிய விக்கெட் கீப்பர் தேவை. அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் எந்த ஒரு கீப்பரும் அணியின் ஃபீல்டிங்கை மேம்படுத்துவதுடன் ஸ்லிப் ஃபில்டர்களை கூடுதல் பிரதேசத்தை மறைப்பதற்கு அனுமதிக்கிறார்”
“பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உதவியுடன் காயத்திற்கு முன்பாகவே ரிஷப் பண்ட்டின் கீப்பிங் திறன் பெரிய முன்னேற்றத்தை சந்தித்தது. ஸ்பின்னர்கள் வீசும் போது ஸ்டம்ப்களுக்கு பின்னே அவர் சிறந்து விளங்க கடினமாக உழைத்துள்ளார். பும்ரா, சிராஜ் ஆகியோரின் பிட்னெஸ் மற்றும் ஃபார்ம் ஆகியோர் கடைசி ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிகரமாக செயல்பட வைத்தது”
இதையும் படிங்க: 2வது டெஸ்டில் ஃப்ளாட்டான பிட்ச்சிலும் விக்கெட் எடுக்கக்கூடிய அவரை விளையாட வைங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“அவர்களில் பும்ரா லீடர். அவர் 5 போட்டிகளிலும் விளையாடுவது அவசியம். ஷமியுடன் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது இந்தியாவின் வெரைட்டியை முன்னேற்றும். அஸ்வின், ஜடேஜா ஆகியோரால் சுழல் பந்து வீச்சு நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் நான் குல்தீப் யாதவ் திறனையும் தள்ளுபடி செய்ய மாட்டேன். அதே போல ஜெய்ஸ்வால் போன்ற இளம் பேட்ஸ்மேன்களை ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் வழி நடத்துவார்கள்” என்று கூறினார்.