எடுத்ததும் இந்திய அணியில் சான்ஸ் கொடுக்காதீங்க.. முதலில் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுங்க.. பிஷப் கோரிக்கை

Ian Bishop
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் 21 வயதாகும் இளம் வீரர் மயங் யாதவ் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வகையில் அசத்தி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான அவர் பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியிலேயே 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

குறிப்பாக ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்து வீசிய அவர் 2024 ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்தார். அப்படியே பெங்களூருவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பெரும்பாலும் 150 – 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய அவர் 3 விக்கெட்டுகள் எடுத்து லக்னோவின் வெற்றியில் பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பிஷப் கோரிக்கை:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் 2 போட்டிகளிலும் 2 ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற சரித்திரத்தையும் மயங் யாதவ் படைத்துள்ளார். மேலும் அப்போட்டியில் 157.60 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை உடைத்தார்.

அதனால் இந்தியா தங்களுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக பிரட் லீ போன்ற ஜாம்பவான் வீரர்கள் சமீபத்தில் பாராட்டு தெரிவித்திருந்தனர். அதே காரணத்தால் தற்போது மயங் யாதவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வெளிவரத் துவங்கியுள்ளன. இந்நிலையில் பிசிசிஐ அறிமுகம் செய்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒப்பந்தத்தில் மயங் யாதவுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அதாவது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவதற்காக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் வேகப்பந்து வீச்சு ஒப்பந்தத்தை பிசிசிஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதில் ஆகாஷ் தீப், உம்ரான் மாலிக், விஜயகுமார் வைசக், யாஷ் தயாள், வித்வத் கவேரப்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விராட் கோலியை அவுட்டாக்கிய தமிழக வீரர் மணிமாறன்.. வரலாற்றில் 10வது தனித்துவ வீரராக அசத்தல் சாதனை

அந்த பட்டியலில் மயங் யாதவுக்கு 6வது வீரராக வாய்ப்பு கொடுக்கலாம் என்று தெரிவிக்கும் பிஷப் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வேகப்பந்து வீச்சு ஒப்பந்த பட்டியலில் 6வது பெயரை சேர்ப்பதற்கு இதை விட வேறு ஒன்றும் தேவையில்லை” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல 2024 ஐபிஎல் தொடரில் இதே போல தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் விரைவில் மயங் யாதவுக்கு பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் கிடைக்க பிரகாச வாய்ப்புள்ளது.

Advertisement