தாய்க்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றிய வெஸ்ட்இண்டீஸ் வீரர் – பின்னணியை பகிரும் ஜாம்பவான்

- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 15-வது சீசன் மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி ஒரு மாதம் கடந்து பல த்ரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. வழக்கம் போலவே இந்த வருட ஐபிஎல் தொடரிலும் பெரும்பாலான போட்டிகளில் இரு அணிகளும் சம அளவில் பலப்பரிட்சை நடத்துவதால் வெற்றி என்பது கடைசி ஓவர் வரை சென்று ஒருசில சமயங்களில் கடைசி பந்தில் தான் தீர்மானிக்கப் படுகிறது. அந்த அளவுக்கு ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட தரமான கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடரானது அதில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தும் எத்தனையோ வீரர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.

Top 5 Exciting Young Talented Players to Watch Out in IPL 2022

- Advertisement -

இந்தியா மட்டுமல்லாது உலகின் எந்த ஒரு இடத்திலும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்த தொடர் சிவப்பு கம்பளம் விரித்து அவர்களுக்கான வாய்ப்பளித்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவாக்கி வருகிறது. அதே சமயம் அவர்களின் ஏழ்மையையும் போக்கும் இந்தத் தொடரால் இன்று பல ஆயிரம் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன.

ரோவ்மன் போவல்:
தெருக்களில் பானி பூரி விற்ற இளம் ராஜஸ்தான் வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் தனது திறமையை வெளிப்படுத்தியதால் ஒரே நாளில் கோடீஸ்வரனானது போன்ற நிறைய நெஞ்சைத் தொடும் கதைகளை இந்த ஐபிஎல் தொடரில் பார்த்துள்ளோம். அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ரோவ்மன் போவல் பற்றியும் அவரின் வறுமை மிகுந்த குடும்பத்தைப் பற்றியும் வர்ணனையாளராக பணியாற்றி வரும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் பகிர்ந்துள்ளார்.

powell

உள்ளூர் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தலாக அதிரடியாக செயல்பட்ட ரோவ்மன் போவெல் 2.8 கோடி என்ற நல்ல தொகைக்கு டெல்லி அணிக்காக விளையாட ஏலத்தின் போது ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிலையில் இந்த வருடம் முதல் போட்டியில் இருந்தே வாய்ப்பு பெற்று வரும் அவர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இருப்பினும் நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 147 என்ற இலக்கை துரத்திய டெல்லி 84/5 எனத் தடுமாறிய போது களமிறங்கிய அவர் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 33* (16) ரன்கள் விளாசி முதல் முறையாக வெற்றிகரமான பினிஷிங் செய்து டெல்லியின் 4 விக்கெட் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தாய்க்கு செய்த சத்தியம்:
அந்த நிலைமையில் நேற்றைய போட்டி முடிந்த பின் அவரது வறுமையான குடும்பத்தில் பின்னணியை பகிர்ந்த இயன் பிஷப் பேசியது பின்வருமாறு. “உங்களில் யாருக்காவது ஒரு 10 நிமிடம் வேலையைத் தவிர எஞ்சிய நேரம் இருந்தால் யூடியூப் பக்கத்தில் சென்று ரோவ்மன் போவெல் வாழ்க்கைக் கதையைப் பற்றி பாருங்கள். அப்போதுதான் அவர் ஐபிஎல் தொடரில் கால் பதித்து ருசித்துள்ள வெற்றியால் என்னை போன்றவர்கள் எதற்காக மகிழ்ச்சி அடைகிறோம் என்பது புரியும். அவர் பள்ளிப்பருவத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது தாயிடம் உங்களை கண்டிப்பாக வறுமையிலிருந்து மீட்டெடுப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தார். அதன்பின் அதை நிறைவேற்றுவதற்காகவே வாழ தொடங்கியது உண்மையாகவே பெரிய கதையாகும்”

“மொய்ன் அலி – அடில் ரசித் போன்றவர்களுக்கு எதிராக வெஸ்ட்இண்டீசில் அவர் அடித்த சதம் மற்றும் இந்தியாவுக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் இதே சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி 43 என்ற பேட்டிங் சராசரி கொண்டதை திரும்பவும் நினைத்துப் பார்க்கிறேன். அவர் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக்கூடிய தன்மையை வளர்த்துக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறும் அந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் கரீபியன் பிரீமியர் லீக் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் தந்தையின்றி தனது தாய் மட்டும் தன்னை வளர்ப்பதற்காக எதிர்கொண்ட கடினமான தருணங்களையும் இளம் தங்கையைப் பற்றியும் அவரின் வறுமையான குடும்பப் பின்னணியைப் பற்றியும் பகிரப்பட்டுள்ளது. அத்தனை கடின தருணங்களை தாண்டி வந்தாலும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று அந்த வீடியோவிலும் இயன் பிஷப் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஒரு போட்டியில் சதமடித்த ரோவ்மன் போவெல் அதன்பின் கடந்த பிப்ரவரியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரிலும் அசத்தலாக பேட்டிங் செய்தார்.

இதையும் படிங்க : அடி தூள்! அப்போ கப் எங்களுக்கு தானா, இந்த வருடம் சாம்பியன் ஆகப்போகும் அணி எது தெரியுமா? – விவரம் இதோ

அந்த வகையில் முன்பை விட பேட்டிங்கில் முன்னேற்றமடைந்து ஐபிஎல் தொடரிலும் அசத்த தொடங்கியுள்ள ரோவ்மன் போவல் தனது தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று இயன் பிஷப் மனதார பாராட்டியுள்ளார். மொத்தத்தில் வெஸ்ட் இண்டீசில் உள்ள ஒரு குடும்பம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரால் பயனடைவது இந்திய ரசிகர்களுக்கு பெருமையான ஒன்றாகும்.

Advertisement