அடி தூள்! அப்போ கப் எங்களுக்கு தானா, இந்த வருடம் சாம்பியன் ஆகப்போகும் அணி எது தெரியுமா? – விவரம் இதோ

Hardik Pandya GT Vs RR 2.jpeg
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து ஜொலித்து வருகிறது. அந்த அணியை இதற்கு முன் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா வழி நடத்துவத்தால் இந்த அணி எங்கே வெற்றி பெறப் போகிறது என அனைவரும் ஆரம்பத்தில் குறைத்து எடை போட்டனர். ஆனால் அவர்களின் கணிப்பை பொய்யாக்கும் வகையில் ஒவ்வொரு போட்டியிலும் அற்புதமாக செயல்படும் அந்த அணி இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 7 வெற்றிகளையும் ஒரே ஒரு தோல்வியையும் பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

GT

- Advertisement -

மிரட்டும் குஜராத்:
அந்த அணியின் பந்துவீச்சில் முகமது சமி, லாக்கி பெர்குசன், ரஷித் கான் ஆகியோர் தங்களது அதிரடியான பந்துவீச்சால் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதேப்போல் பேட்டிங்கில் இளம் வீரர் சுப்மன் கில் உடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா மிரட்டலாக தேவையான ரன்களை குவித்து வெற்றி பங்காற்றி வருகிறார். குறிப்பாக இந்தியா மற்றும் மும்பை போன்ற அணிகளுக்கு மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் கேப்டனனானதும் நேரடியாக 3-வது இடத்தில் பேட்டிங் செய்து தனது அணி சரியும் போதெல்லாம் தாங்கிப்பிடிக்கிறார்.

அந்த வகையில் இந்த வருடம் 7 போட்டிகளில் 305 ரன்களை குவித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல் ஆகியோருக்குப் பின் 3-வது இடத்தில் அசத்தி வருகிறார். அவரை போலவே அவரின் அணியும் இந்த வருடம் இதர அணிகளை காட்டிலும் மிரட்டலாக செயல்பட்டு வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் பஞ்சாப்க்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த அணியின் ராகுல் திவாடியா அடுத்தடுத்த 2 சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டலான பினிஷிங் செய்து தனி ஒருவனாக திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

சாதிப்பாரா பாண்டியா:
அதேபோல் சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி உறுதி என நினைத்த வேளையில் சரவெடியாக பேட்டிங் செய்த டேவிட் மில்லர் 94* விளாசி தனி ஒருவனை போல 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதைவிட கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த போட்டியில் கடைசி 5 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்ட போது 40* (21) ரன்கள் எடுத்து மிரட்டலாக பேட்டிங் செய்த ராகுல் திவாடியாவுக்கு உறுதுணையாக கைகோர்த்த ரஷித் கான் 31* (11) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 1, 6, 0, 6, 6 என அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்ட இந்த ஜோடி திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

- Advertisement -

மேற்கூறிய 3 போட்டிகளிலுமே கிடைக்காது என நினைத்த வெற்றியை கூட திறமையால் எட்டிப்பிடித்த குஜராத் இந்த வருட ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தாங்கள் தகுதியான அணி என நிரூபித்து வருகிறது. இப்படி புள்ளிப் பட்டியலில் முதலிடம், அதிரடியான கடைசி பந்து திரில்லர் வெற்றிகள் என எதிரணிகளை மிரட்டும் அணியாக வலம் வரும் பாண்டியா தலைமையிலான குஜராத் தங்களது முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் ஆழமாக நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு தீனி போடும் வகையிலான ஒரு புள்ளிவிவரத்தை பற்றி பார்ப்போம்.

gt

1. அதாவது ஐபிஎல் 2013 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லீக் சுற்றில் முதல் 4 போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கேப்டனாக செயல்பட்டார். அதற்குபின்பு தான் ரோகித் சர்மா முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்றார். அப்படி ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தலைமையில் மும்பை களமிறங்கிய முதல் 8 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பதிவு செய்தது.

- Advertisement -

2. ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பின் அந்த முதல் தோல்வி ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் தலைமையில் மும்பை சந்தித்த 4-வது போட்டியில் வந்ததாகும். அதன்பின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அந்த அணி இறுதிப்போட்டியில் சென்னையை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

pandya

3. அதுநாள் வரை சச்சின் வழிநடத்தியபோதும் கோப்பையை வெல்லாத அந்த அணி ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. அதன்பின் 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற சாதனை படைத்து இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : அவ்ளோ பெரிய வீரரை வெளிய உக்கார வச்சா எப்படி கொல்கத்தா டீம் ஜெயிக்கும் – யுவராஜ் சிங் கருத்து

4. தற்போது அதேபோல் குஜராத்தின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் 8 போட்டிகளில் 7 வெற்றிகளையும் ஒரே ஒரு தோல்வியையும் அந்த அணி பதிவு செய்துள்ளது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதே 4-வது போட்டியில் அதே ஹைதராபாத்துக்கு எதிராக குஜராத் தோற்றது. இதை அறியும் குஜராத் ரசிகர்கள் “அப்போ கப் எங்களுக்கு தானா” என கூறினால் அதில் எந்தவித தவறுமில்லை.

Advertisement