இந்திய அணியின் வீரரான இவருக்கு எதிராக பந்துவீசுவது ரொம்ப கஷ்டம் – மனம்திறந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்

Bishop
- Advertisement -

இந்த காலத்தில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்ல சற்று தடுமாறி வருகிறது. ஆனால் ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் மிகப்பெரும் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை வைத்திருந்தது. அந்த அணி ஒரு முடிசூடா மன்னனாக வந்துகொண்டிருந்தது. கர்ட்னி ஆம்புரோஸ், மால்டம் மார்ஷல் என பல உயரமான மிரட்டலான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இருந்தனர்.

Bishop 2

அந்த அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இயான் பிஷப் ஒருவர் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியவர்தான் இயான் பிஷப். அவர் 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 161 விக்கெட்டுகளையும் 84 ஒருநாள் போட்டிகளில் ஆடி 113 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக இருந்து வருகிறார். மேலும் பல முன்னணி தொடர்களுக்கு தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் யாருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது என்பது பற்றி பேசசியுள்ளார். அவர் கூறுகையில்..

Bishop 1

சச்சின் டெண்டுல்கருக்கு நான் பந்துவீசும் போது சற்று கடினமாக உணர்வேன். ஏனெனில் எல்லா திசையிலும் அவரால் ஷாட்கள் ஆட முடியும். பல அருமையான திறமையை தான் கையில் வைத்துள்ளார். அவருக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். சச்சின் ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதத்தில் அடித்து ஆடுவார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக இயான் பிஷப் 4 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பந்து வீசியுள்ளார். மூன்று முறை சச்சின் டெண்டுல்கரை விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மட்டுமல்ல உலகின் பல்வேறு முன்னணி பந்துவீச்சாளர்களும் சச்சினுக்கு எதிரே கஷ்டப்பட்டதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 வருடங்களில் 200 டெஸ்ட் போட்டிகளிலும் 463 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement