தப்பு பண்ணிட்டாரு ! வெற்றி பெற்ற பின்பும் ரோஹித்தை விமர்சித்த முன்னாள் ஜாம்பவான்கள் – எதற்கு தெரியுமா

Rohit Sharma Ishan Kishan
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 6-ஆம் தேதி நடைபெற்ற 51-ஆவது லீக் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வலுவான குஜராத்தை கடைசி இடத்தில் தவிக்கும் மும்பை எதிர்கொண்டது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 177/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 5 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (28) ரன்களும் இஷான் கிசான் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (29) ரன்களும் எடுத்து 74 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

Rohit Sharma Hardik Pandya MI vs GT

- Advertisement -

ஆனால் அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 13 (11) திலக் வர்மா 26 (16) கைரன் பொல்லார்ட் 4 (14) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அந்த இக்கட்டான கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 44* (21) ரன்கள் எடுத்து அற்புத பினிஷிங் கொடுத்து மும்பையை காப்பாற்றினார்.

மும்பை திரில் வெற்றி:
அதனால் 178 என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத்துக்கும் அதன் தொடக்க வீரர்கள் ரித்திமான் சாஹா 6 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (40) சுப்மன் கில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (36) ரன்களும் எடுத்து 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து 12-வது ஓவரில் ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 14 (11) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட முயன்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 (14) ரன்களில் ரன் அவுட்டானதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் ராகுல் திவாடியா – டேவிட் மில்லர் இருந்த காரணத்தால் குஜராத் வெற்றி உறுதி என அனைவரும் நினைத்தனர்.

Daniel Sams

ஆனால் அந்த கடைசி ஓவரை அற்புதமாக வீசிய டேனியல் சாம்ஸ் 1, 0, 1, 1, 0, 0 என 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 3-வது பந்தில் ராகுல் தீவாடியா ரன் அவுட்டாகும் அளவுக்கு சிறப்பாக பந்து வீசி மில்லரை 19* (11) ரன்களை எடுத்தும் பினிசிங் செய்யவிடாமல் மும்பைக்கு 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

டிம் டேவிட்:
இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் மும்பை தடுமாறியபோது முக்கியமான 44* ரன்கள் எடுத்து பினிஷிங் செய்த டிம் டேவிட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இவர் கடைசியாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வெறும் 9 பந்தில் 20* ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் மும்பையின் முதல் வெற்றிக்கு துருப்பு சீட்டாக செயல்பட்டார். ஆனால் இப்படிப்பட்ட திறமை இவரை 8.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கிவிட்டு முதல் 2 போட்டிகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார் என்பதற்காக எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா பெஞ்சில் அமர வைத்தார்.

Tim David MI vs RR

எப்போதுமே எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் ஒருசில போட்டிகளில் தடுமாறுவது சகஜம் தான் என்ற நிலையில் பெஞ்சில் அமர வைப்பதற்காகவா அவரை அவ்வளவு கோடி கொடுத்து வாங்கினீர்கள் என்று ரோகித் மற்றும் மும்பை அணி நிர்வாகத்திடம் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இறுதியில் வேறு வீரர்களுக்கு வாய்ப்பளித்த மும்பை அதில் தோல்வியடைந்ததால் மீண்டும் அவருக்கு கடந்த சில போட்டிகளாக வாய்ப்பை அளித்துள்ளது.

- Advertisement -

விமர்சனம்:
அந்த நிலைமையில் கடைசி 2 போட்டிகளில் கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்ட டிம் டேவிட் மும்பையின் 2 வெற்றிகளுக்கும் துருப்புச் சீட்டாக செயல்பட்டு தமக்கு தொடர்ந்து வாய்ப்பளித்திருந்தால் மும்பை பிளே ஆஃப் சுற்றிச் செல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பளிக்கும் முடிவை லேட்டாக எடுத்த ரோகித் சர்மா தவறு செய்துவிட்டார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் விமர்சித்துள்ளார்.

Bishop

இது பற்றி அவர் நேற்றைய போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “டிம் டேவிட் ஏன் விளையாடவில்லை என்று சமீப காலங்களாக நிறைய பேர் கேட்டார்கள். அவர் இந்த 2 போட்டிகளில் நான் ஏன் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும் என்று காட்டியுள்ளார். மேலும் அவர் மேல் பேட்டிங் வரிசையில் விளையாட விருப்பம் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். பேட்டிங்கில் முன்கூட்டியே சென்று அதிரடியாக விளையாடுவதை அவர் விரும்புகிறார். இளமையாக இருக்கும் அவர் தனது கேரியரின் உச்சத்தை நோக்கி இப்போதுதான் பயணிக்கிறார். எனவே இவரை புறக்கணிக்காமல் வாய்ப்பளித்து மலர்வதற்கு வழிவிட வேண்டும்” என்று கூறினார்.

அதேபோல் இதற்கு முந்தைய போட்டிகளில் 4 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் டிம் டேவிட்டை பெஞ்சில் அமர வைத்து விட்டு 2 – 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் விளையாடும் முடிவை ரோகித் சர்மா ஏன் எடுத்தார் என்று இதுவரை புரியவில்லை என நியூசிலாந்து ஜாம்பவான் டேனியல் வெட்டோரி இது பற்றி ரோகித் சர்மாவை விமர்சித்துள்ளார்.

Advertisement