இவர் இல்லாத இந்திய அணியை இனி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது – இயான் பெல் ஓபன்டாக்

Bell

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முதல் நேற்று முன்தினம் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர் வரை ரிஷப் பண்டின் வளர்ச்சி மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ரிஷப் பண்ட் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னை வடிவமைத்துக் கொண்டு வருகிறார் என்று இயன் பெல் ரிஷப் பண்டை புகழ்ந்துள்ளார். ரிஷப் பண்ட் இன் பேட்டிங்கை காண்பதற்கு இப்போது நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.அவரது அதிரடியான ஷாட்டுகள் மற்றும் வினோதமான சிலவகை ஷாட்டுகளை காண ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

pant 1

இது குறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் முன்புபோல களமிறங்கியதும் அதிரடியாக மட்டுமே ஆடாமல், சூழலை கணித்து தேவைப்படும் நேரங்களில் நிதானித்து பின்னால் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை மேற்கொள்ள கூடியவராக ரிஷப் பண்ட் தற்பொழுது வளர்ந்து நிற்கிறார் என்று இயன் பெல் கூறியுள்ளார்.

மேலும் பேசிய இயன் பெல் : ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட கூடியவர் அவரிடம் எந்தவிதமான பொறுமையும் இருக்காது என்று அனைவரது பேச்சுக்களையும் மறைக்கும் வண்ணம் ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் சரி இந்த இங்கிலாந்து தொடரிலும் சரி ரிஷப் பண்ட் மிக பொறுமையாக மட்டும் நிதானமாக விளையாடி உள்ளார்.

Pant

இந்திய அணிக்கு தேவைப்படும் நேரங்களில் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு ரிஷப் பண்ட் கொண்டு சென்றுள்ளார். யாரெல்லாம் அவரை பொறுப்பே இல்லாமல் விளையாடி வருகிறார் என்று கூறினார்களோ அவர்கள் மூலமாகவே ரிஷபன் மிக அற்புதமாக ஆடி வருகிறார் என்று கூற வைத்துவிட்டார்.

- Advertisement -

pant 1

ரிஷப் பண்ட் இதேபோல இனிவரும் காலங்களில் நிச்சயமாக சிறப்பாக விளையாடுவார்.மேலும் ரிஷப் பண்ட் இல்லாத ஒரு இந்திய அணியை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கண்டிப்பாக இனிவரும் காலத்தில் ரிஷப் பாண்ட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார். மேலும் இந்திய அணி என்றாலே ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இடம் பெற்று விடுவார் என்றும் கூறினார்.