நான் செய்தது தான் தவறு. தோனி அந்த விருதுக்கு தகுதியானவர் தான் – பல ஆண்டு சம்பவத்தை நினைவு கூர்ந்த இயான் பெல்

Bell
- Advertisement -

2011ஆம் ஆண்டு நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர் இயான் பெல் 137 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் தேனீர் இடைவேளை முடிந்து திரும்ப வரும் போது அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். இந்த சம்பவத்தை அப்போது பார்த்த ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

bell

ஏனெனில் பந்து பவுண்டரி லைனை கடந்து சென்று விட்டது என்று நினைத்து ரன் ஓடாமல் இருந்து ரன் அவுட் ஆனார். ஆனாலும் மீண்டும் தேனீர் இடைவேளைக்கு பிறகு அவர் தோனியின் அறிவுறுத்தலின்படி மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். தோனியின் இந்த பெருந்தன்மையான செயல் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

அதன்பிறகு தோனியின் இந்த செயலுக்காகபோது சமீபத்தில் “ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்” விருது கிடைத்தது. இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள இங்கிலாந்து வீரர் இயான் பெல் கூறுகையில் :

அந்த சம்பவம் மிகுந்த சுவாரசியமான அனுபவமாக இருந்தது. பந்து பவுண்டரி லைனை கடந்திருக்கும் என கருதி நின்று விட்டேன். அதுமட்டுமின்றி நான் அப்போது பசியாக இருந்ததாகவும் நினைவு இதனால் பெவிலியனுக்கு திரும்புவதில் குறியாக இருந்தேன். நல்லவேளை தோனியின் பெருந்தன்மையால் நான் அந்த ரன்அவுட்டில் இருந்து தப்பித்தேன்.

bell 2

அந்தப் போட்டியில் நான் செய்தது தவறு நான், அன்று நான் அப்படி செய்திருக்கக் கூடாது. தோனியின் இந்த செயலுக்காக அவருக்கு ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட் அவார்ட் கிடைத்தது அந்த விருதுக்கு தோனி தகுதியானவர் தான் எனவும் இயான் பெல் தற்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement