இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதைத்தான் செய்ய போகிறேன்..! அஸ்வின் அதிரடி..!

ravi

இந்திய அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்ட்டுள்ள அஸ்வின் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Ravichandran
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியும், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.

இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை இந்திய அணி அறிவித்திருந்தது. அதில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சர்களான அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சமீபத்தில் அஸ்வின் பேட்டியளிகையில்”தற்போது இருக்கும் சர்வதேச கிரிக்கெட் இருக்கும் நிலவரத்தில் உங்களின் திறமையை நிரூபிக்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது. என்னை பொறுத்த வரை சூழ்நிலையை புரிந்து கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்பது தான் முக்கியம்.
ashwin
இங்கிலாந்து சென்று ஆடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இந்த தொடரில் இதுவரை நான் பெற்ற அணைத்து அனுபவங்களையும் பயன்படுத்தி என்னால் முடிந்த வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதே போல இந்த தொடரில் என்னால் எந்த அளவிற்கு முடியுமா அந்த அளவிற்கு கற்றுக்கொண்டு ஒரு புதிய வீரராக நான் வெளிவருவேன்.” என்று கூறியுள்ளார்.
Chat Conversation End
Type a message…