ஐபிஎல் ஏலத்தின் போது பயந்து பாத்ரூமில் ஒளிந்துகொண்டேன் – கண்ணீருடன் இளம் வீரர்

kamalesh

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் முதல் தொடங்கப்பட உள்ளது.இந்நிலையில் ஐபிஎல் ஏலம் சென்றமாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தின்போது பெரிய வீரர்கள் பலர் ஏலம் எடுக்கப்படாமல் போனார்கள். அதே சமயத்தில் புதிய வீரர்கள் சிலர் அதிக விலைக்கு சென்றார்கள்.

cricket

இந்த ஏலத்தில் தன்னை ஏலம் எடுப்பார்களா மாட்டார்களா என்கிற அச்சத்தில் பாத்ரூமிற்கு சென்று ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார் கொல்கத்தாவின் சார்பாக ஏலம் எடுக்கப்பட்டுள்ள கம்லேஷ்.

ஆனால் அவரே எதிர்பார்க்காத வகையில் 3.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டதை அவரால் நம்பவே முடியவில்லை என்கிறார்.ஜீனியர்   உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று விளையாடியவர் தான் இந்த கம்லேஷ். ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் உலகக்கோப்பையை தட்டிச்சென்ற இந்திய அணியில் அசால்டாக 140கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமையான வீரர்.

Kamlesh1

ஐபிஎல் ஏலம் எடுக்கும் முன்னர் ஒரே ஒரு தடவை மட்டும்தான் ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -