தமிழ்நாட்டில் மகேஷை பாத்தேன்.. நான் பழைசை மறந்து மாறியவன் இல்ல.. யுவி, மிஸ்ராவுக்கு கோலி பதிலடி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது முதல் சீராக அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அசத்தி வரும் அவர் இதுவரை 27000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதே போல 82 சதங்கள் அடித்து நிறைய சாதனைகள் படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வருகிறார். அப்படிப்பட்ட விராட் கோலி தற்போது பணம், புகழ் ஆகியவற்றால் முற்றிலும் மாறிவிட்டதாக முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கடந்த வருடம் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இளம் வயதில் டெல்லி அணிக்காக உள்ளூரில் விராட் கோலியும் தாமும் ஒன்றாக விளையாடியதாக மிஸ்ரா கூறினார்.

- Advertisement -

மாறிய கோலி:

இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரியளவில் வளர்ந்தப் பின் விராட் கோலி மாறி விட்டதாக மிஸ்ரா கூறியிருந்தார். அதே சமயம் முதல் நாளில் சந்தித்ததிலிருந்து தற்போது வரை ரோஹித் சர்மா மாறவில்லை என்றும் மிஸ்ரா கூறியிருந்தார். இது ஒரு புறமிருக்க தற்போது கோலி பன்மடங்கு வளர்ந்து பிஸியான வீரராக மாறி விட்டதாக ஜாம்பவான் யுவ்ராஜ் சிங் தெரிவித்திருந்தார்.

இது பற்றி 2023ஆம் ஆண்டு கொடுத்த பேட்டியில் யுவ்ராஜ் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை நான் தொல்லை செய்வதில்லை. ஏனெனில் அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். இளம் விராட் கோலியின் பெயர் சீக்கு. ஆனால் இன்றைய சீக்கு விராட் கோலியாக மாறிவிட்டார். அவரிடம் பெரிய வித்தியாசம் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

எப்போவும் மாறல:

இந்நிலையில் இது பற்றி சமீபத்திய பேட்டியில் விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு தாம் பழசை மறந்து மாறக்கூடியவன் கிடையாது என்று விராட் கோலி தெரிவித்தார். அதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் உள்ள தம்முடைய நண்பர் மற்றும் சக வீரர் யோ மகேஷை 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரானப் போட்டியில் சந்தித்தது பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு அடுத்து தனித்துவமான சாதனை நிகழ்த்திய – சுப்மன் கில்

“நான் யாரிடமும் வித்தியாசமாக நடந்து கொண்டதில்லை. ஏனெனில் என்னிடம் எந்த வித்தியாசமும் ஏற்பட்டதாக நான் கருதவில்லை. நான் சந்திக்கும் அனைவரிடமும் ஒரே மாதிரியாகவே இருக்கிறேன். சமீபத்தில் என்னுடைய அண்டர்-19 அணி தோழர்கள் டன்மய் ஸ்ரீவஸ்தவா, அஜிதேஷ் அர்கல் ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் நடுவர்களாக இருக்கிறார்கள். அது போக சமீபத்தில் சென்னையில் யோமியை சந்தித்தேன். அவருடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். எந்த விஷயங்களும் மாறவில்லை” என்று கூறினார்.

Advertisement