மும்பை எதிரான ஆட்டத்திற்கு நான் 100 சதவீதம் பிட் இல்லை..! புலம்பும் கொல்கத்தா வீரர்..! – காரணம் இதுதான் ?

dinesh-karthik
- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் அணைத்து அணிகளுமே 10 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டது. கடந்த ஞாற்றுக்கிழமை மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் நடந்து முடிந்த 10 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில உள்ளது கொல்கத்தா அணி.
lynn

இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கபட்ட அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லைன், இதுவரை 277 ரன்களை குவித்து கொல்கத்தா அணியில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ளார். இருப்பினும் தான் இந்த ஐபிஎல் தொடரில் தனது 100 சதவீத ஆட்டத்தை அளிக்கவில்லை என்று வருத்தமாக கூறியுள்ளார் இந்த 28 வயது நிரம்பிய ஆஸ்திரேலியா வீரர்.

- Advertisement -

இதுபற்றி கிறிஸ் லைன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவிக்கையில் “இந்த ஐபில் தொடரில் விளையாடியபோது ஆரம்பத்தில் எனக்கு சற்று பதட்டமாக இருந்தது பின்னர், நான் சுதந்திரமாக விளையாட தொடங்கினேன். இருப்பினும் நான் எனது 100 சதவீத திறமையை இன்னும் வெளிக்காட்ட முடியவில்லை.

என்னை பொறுத்தவரை பேட்டிங் என்பது எனக்கு கடினமான விஷயம் இல்லை. ஆனால் பீல்டிங் பொறுத்தவரை நான் எங்கு நின்று பீல்ட் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு சில கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் எப்படியோ நான் எனது சிறப்பான ஆட்டத்தை இறுதியில் நிரூபித்துவிடுவேன் ” என்று தெரிவித்துள்ளார்.

lynn1

மேலும், “மும்பை அணியில் என்னை போன்று சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். நாங்கள் கண்டிபாக இனி வரும் அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவோம். எங்கள் அணி இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐபில் தொடரின் இறுதி போட்டி வரை பயணிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Advertisement