ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வருடமும் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் அசத்திய இந்தியா நாக் அவுட் சுற்றைத் தொட்டுள்ளது. அங்கே சிறப்பாக விளையாடி 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சு துறையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திண்டாட வைக்கும் அவர் குறைந்த ரன்களை கொடுத்து துல்லியமாக பந்து வீசுவதில் வல்லவராக செயல்பட்டு வருகிறார். எனவே இம்முறை அவர் இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
பாராட்டும் எச்சரிக்கையும்:
இந்நிலையில் தாம் ஜஸ்ப்ரித் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் பும்ரா போராடுவதற்கு தேவையான ரன்களை பேட்ஸ்மேன்கள் அடித்து கொடுக்கவில்லை என்றால் இந்தியா தோற்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஜஸ்ப்ரித் பும்ரா வித்தியாசமான பவுலர் நான். அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவர் பந்து வீசுவதை நான் பார்க்க விரும்புவேன். ஏனெனில் அவர் மற்றவர்களைப் போல் வேகமாக ஓடிவந்து பந்து வீசாமல் வித்தியாசமாக வீசுகிறார். மிகவும் குறைந்த தூரத்தில் கிட்டத்தட்ட நடந்து வருவது போல் அவர் பந்து வீசுகிறார். அவர் அப்படி எது செய்தாலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது”
“இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் மகத்தான வேலை செய்து வருகிறார். தாம் விரும்பும் அளவுக்கு அவரால் பந்தை ஸ்விங் செய்து வேகத்தை உருவாக்க முடிகிறது. எனவே அவர் மிகவும் நுணுக்கங்கள் நிறைந்த பவுலர். ஆனால் இது அணி விளையாட்டு. அவரால் மட்டும் தனியாக எதுவும் செய்ய முடியாது. பும்ரா நன்றாக பந்து வீசினாலும் மற்ற பவுலர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அசத்த முடியாது”
இதையும் படிங்க: எங்க ஊர்ல மாறலன்னா அடிவாங்குவீங்க.. இந்திய அணியை எச்சரித்த செயின்ட் லூசியா மைதான பராமரிப்பாளர்
“அதைத் தவிர்த்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கவில்லை என்றால் இந்தியா தோற்கும். எனவே அணி விளையாட்டில் கண்டிப்பாக அவர் வெற்றியில் பெரிய வேலை செய்வார். ரோகித் சர்மா சிறப்பான கேப்டன். விராட் கோலியும் சிறப்பானவர். இவர்களை தவிர்த்து ரிஷப் பண்ட் ஆபத்தான வீரர். இந்திய அணி சமநிலையுடன் இருக்கிறது” என்று கூறினார்.



