ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் அதிரடி வீரர் …யார் தெரியுமா ? – ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி !

stanlake
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ. பி. எல் போட்டிகளில் சன் ரைசஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லாக் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த அணிக மேலும் ஒரு பந்து வீச்சாளரை இழந்துள்ளது.

sunrise

- Advertisement -

கடந்த 22 தேதி சென்னைக்கு எதிரான போட்டியின் போது விளையாடிய ஸ்டான்லாக்கிற்கு அவரது சுண்டுவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது இதனால் அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்தி இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் காயம் இன்னும் ஆராததால் இனி வரும் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இனி நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் தாம் விளையாட போவது இல்லை என்று ஸ்டான்லாக் தெரிவித்துள்ளார்.

இந்த ஐ பி எல் சீசனில் ஹைத்ராபாத்தின் பலமே அந்த அணியின் பந்து வீச்சாகத்தான் இருந்து வந்தது. அந்த அணியின் சூழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் மற்றும் வேக பந்து வீச்சாளர் பூவேனேஸ்வர் குமார் போன்ற பந்து வீச்சாளர்களை வைத்துத்தான் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளை ஹைத்ராபாத் அணி சமாளித்து வந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்னாள் புவனேஷவர் குமாரும் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக அந்த அணிக்கு நெருக்கடி கூடிவிட்டது.

இருப்பினும் அந்த அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் எதிரணியை தனது பந்து வீச்சின் மூலம் தினரடித்து வருகிறார்.மேலும் தற்போது இரண்டு வேக பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெறாததால் இனிவரும் போட்டிகளில் ஹைத்ராபாத் அணி எப்படி எதிரணியின் ரன் குவிப்புகளை தடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. இதனால் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு சற்று நெருக்கடி கூடியுள்ளது.

Advertisement