கொரோனா பாதிப்பு : ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் செய்த செயல் – ரசிகர்கள் பாராட்டு

SRH
- Advertisement -

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போது வரை இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 நெருங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் இன்னும் சில வாரங்களில் ஆயிரக்கணக்கில் இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Corona-1

- Advertisement -

மேலும், இதனால் பாதிக்கப்படும் அல்லது அருகில் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நோயாளியை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை கொடுக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொருவருக்கும் தனி படுக்கையறை தனி அறை என தேவைப்படுகிறது. ஒருவேளை படுக்கைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டால் புதிதாக பல வசதிகளை செய்ய வேண்டி உள்ளது.

இதன் காரணமாக இந்திய ரயில்வே, ரயில் பெட்டிகளை படுக்கையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கம் ஆகிய இரண்டும் தங்களது மைதானத்தை தரவும் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளது .

corona 1

இந்நிலையில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் மைதானத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் உள்ள வீரர்கள் அறையை இதற்காக வழங்க தயாராக இருக்கிறோம் என்று அவர் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஸ்டேடியத்தில் 40 அறைகள் மற்றும் மிகப்பெரிய பார்க்கிங் வசதி உள்ளது. இது குறித்து பேசிய ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கூறியதாவது :

- Advertisement -

அரசுக்கு நாங்கள் ஏதாவது திரும்ப செய்ய வேண்டும். அதற்கு சரியான நேரம் இதுதான் பல ஆண்டுகளாக பொதுமக்கள் எங்களுக்குத் தந்த ஆதரவுக்கு இது கைப்பலனாக இருக்கும். இது நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குழுவாக எடுத்த முடிவாகும் என்று கூறியுள்ளார்.

Ground

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் சிலரின் பொறுப்பற்ற செயல்களால் இந்த பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே நிலைமை தொடருமாயின் இந்தியாவில் கொரோனா நிச்சயம் தனது ஆட்டத்தை பலமாக காண்பிக்கும்.

Advertisement