Shikhar Dhawan : தவானின் வெளியேற்றத்தால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. காரணம் இதுதான் – மைக் ஹஸ்ஸி

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவான் தனது இடது கை பெருவிரல் பகுதியில் காயம் அடைந்தார். அதனால் சில போட்டிகளில் அவர் விளையா

Hussey
- Advertisement -

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவான் தனது இடது கை பெருவிரல் பகுதியில் காயம் அடைந்தார். அதனால் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Dhawan

- Advertisement -

அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்பியது பிசிசிஐ. ஆனாலும் தவான் காயம் குணமடைந்து நிச்சயம் விளையாடுவார் என்று கோலி தெரிவித்தார். அதனால் தவானுக்கு பதில் ராகுல் துவக்க வீரராகவும் விஜய் சங்கர் 4மிடில் ஆர்டரிலும் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் தவானின் காயம் குணமுடைய இன்னும் நாட்கள் அதிகரிக்கும் என்பதால் தவானை அதிகாரபூர்வமாக அணியில் இருந்து வெளியேற்றியது பி.சி.சி.ஐ

இந்நிலையில் தவானின் நீக்கம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தவானுக்கு ஏற்பட்ட காயம் தற்செயலாக ஏற்பட்டது. இதன் தாக்கம் அதிகரித்ததால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். தவான் இருந்திருந்தால் இந்தியாவின் ஓபனிங் சிறப்பாக அமைந்திருக்கும். தற்போதும் தவானின் வெளியேற்றுவதால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

Rahul

ஏனெனில் துவக்க ஆட்டக்காரராக தவானுக்கு பதிலாக விளையாடும் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நாம் பார்த்திருப்போம். எனவே ரோகித் சர்மாவுடன் ராகுல் ஆடுவது எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் மிடில் ஆர்டரில் கோலி, தோனி மற்றும் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதனால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது அவர்கள் இந்த உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஹசி கூறினார்.

Advertisement