- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது இந்தியாவுக்கு எதிராக திரும்பியதே.. தெ.ஆ வெற்றியின் வித்தியாசம்.. ஆட்டநாயகன் டீ காக் பேட்டி

முல்லான்பூரில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 214 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 90 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஓட்னல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைப் பரிசளித்த இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள தென்னாப்பிரிக்கா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் டீ காக்:

தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றிக்கு 90 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய டீ காக் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் 2வது இன்னிங்ஸில் இருதலைபட்சமாக மாறிய பிட்ச் இந்தியாவுக்கு எதிராக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுவே தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு வித்தியாசமாக அமைந்ததாக தெரிவிக்கும் டீ காக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு சில போட்டிகளில் குறைவான ஸ்கோர்களும் சில போட்டிகளில் அதிக ஸ்கோர்களும் கிடைப்பது பொதுவாக நடக்கக்கூடிய ஒன்றாகும். என்னால் முடியும் போது அதை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்”

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக பிட்ச்:

“இந்தியாவுக்கு எதிராக என்னுடைய ரெக்கார்ட் நன்றாக இருப்பதற்கான காரணம் என்னவெனில், அடிக்கடி அவர்களுக்கு எதிராக நாங்கள் நல்ல பிட்ச்சில் விளையாடுகிறோம். அர்ஷ்தீப் என்னை பலமுறை ஒரே வழியில் அவுட்டாக்கியுள்ளார். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் டெக்னிக்கல் அளவில் விழிப்புணர்வுடன் இருந்து உங்களது இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: அதோடு சேர்த்து தோல்விக்கு நாங்க 2 பேர் தான் காரணம்.. கத்துக்கிட்டு கம்பேக் தருவோம்.. சூரியகுமார் பேட்டி

“பிட்ச் முன்பகுதியில் ஸ்லோவாக இருந்ததால் புதிதாக வரும் எந்த பேட்ஸ்மேனும் கடினமாக உணர்வார்கள். ஐடன் மார்க்ரம் ஒரு பக்கம் நின்று விளையாடி என்னுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்தியா பேட்டிங் செய்த போது பிட்ச் வேறு பக்கம் சென்றது. அது இருதலைப் பட்சமாக வேகத்துக்கு அதிக சாதகமாக மாறியது. அதுவே இப்போட்டியில் வித்தியாசமாக அமைந்தது” என்று கூறினார்.

- Advertisement -