வெறும் 100 ரூபாய் முதல் 2026 டி20 உ.கோ டிக்கெட்.. ஆன்லைனில் எங்கே, எப்போது, எப்படி வாங்கலாம்? விவரம் இதோ

ICC T20WC Tickets
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. வரும் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள அத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. வரலாற்றில் 10வது முறையாக நடைபெறும் அத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 20 அணிகள் 55 போட்டிகளில் விளையாட உள்ளன.

மொத்தம் 7 மைதானங்களில் நடைபெறும் அத்தொடரில் இந்தியா தங்களது லீக் சுற்றில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அப்போட்டிகள் வரும் பிப்ரவரி 7, 12, 15, 18 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, டெல்லி கொழும்பு, அகமதாபாத் மைதானங்களில் நடைபெற உள்ளது.

- Advertisement -

100க்கு டிக்கெட் விலை:

அதே போல தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து – அமீரகம், அமெரிக்கா – நெதர்லாந்து, அமெரிக்கா – நமீபியா, நியூசிலாந்து – கனடா, ஆப்கானிஸ்தான் – கனடா அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகள் முறையே பிப்ரவரி 8, 10, 13, 15, 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அது போக பிப்ரவரி 26ஆம் தேதி சூப்பர் 8 போட்டியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பைக்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை வரும் டிசம்பர் 11ஆம் தேதி துவங்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இம்முறை இந்தியா பங்கேற்காத மற்ற போட்டிகளுக்கும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் குறைந்தபட்ச டிக்கெட்டுகளின் விற்பனை வெறும் 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல இலங்கை மதிப்பில் குறைந்தபட்ச டிக்கெட்டின் விற்பனை 1000 இலங்கை ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆன்லைனில் எப்படி வாங்குவது:

வெளிநாட்டு ரசிகர்ககள் வாங்குவதற்காக டாலர்கள் அடிப்படையில் முதற்கட்ட டிக்கெட் விற்பனை இந்தியாவில் 1.11 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே இலங்கையில் 3.26 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி போட்டிகளுக்கு 500 ருபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை ரசிகர்கள் ஆன்லைனில் எளிதாக வாங்க முடியும் என்று ஐசிசி தலைமை நிர்வாக இயக்குனர் சஜோங் குப்தா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த கேப்டன் பதவி மட்டுமல்ல.. சம்பள விடயத்திலும் சுப்மன் கில்லுக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – விவரம் இதோ

அதன் படி டிசம்பர் 11ஆம் தேதி மாலை 6.45 மணி முதல் டிக்கெட்டுகள் ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையத்தில் விற்பனைக்கு வருகிறது. அதற்கு ரசிகர்கள் கணினி அல்லது ஆண்ட்ராய்டு அலைபேசியில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இணைய பக்கத்திற்கு சென்று டிக்கெட்ஸ் என்ற பிரிவுக்கு செல்ல வேண்டும். அங்கே தாங்கள் விரும்பும் போட்டிகள் மற்றும் டிக்கெட் வகையைத் தேர்ந்தெடுத்து ரசிகர்கள் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement