கிரிக்கெட் வீரர்களுக்கு பல கோடி ருபாய் வரை சம்பளமாக வழங்கபடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் விளம்பரங்கள் மூலமும் பல கோடி ருபாய் வரை சம்பளமாக பெறுகின்றனர். சினிமா துறை நடிகர்கள் அளவிற்கு இவர்களது சொத்துக்களின் மதிப்புகள் இருக்கின்றது.
இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் பல வீரர்கள் கோடி கணக்கில் சொத்துக்களை வைத்திருக்கின்றனர். அதிலும் பிரபலமான வீரர்கள் என்றால் அவர்களின் சொத்து மதிப்பு அடேங்கப்பா என்று என்னும் அளவிற்கு இருக்கிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் தோனி அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி 13 ஆண்டுகளுக்கு மேலாக சர்வேதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் உலகில் பிரபலமான தோனி அடிடாஸ், பூஸ்ட், அம்பானி குரூப்ஸ் என்று பல்வேறு கம்பெனிகளின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். மேலும் பல்வேறு விளம்பரங்களை நடித்ததன் மூலம் பல கோடி ருபாய் வரை சம்பளமாக பெற்றுவருகிறார்.
சரி, தற்போது இவரது சொத்து மதிப்பின் விவரத்தை பற்றிய விசயத்திற்கு வருவோம். 2015 ஆம் நடத்தபட்ட ஆய்வின்படி, கிரிக்கெட் உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட்டர்கள் வரிசையில் தோனி 23வது இடத்தில இருந்தார். அந்த ஆண்டு வரை தோனி 31 மில்லியன், அதாவது கிட்டத்தட்ட180 கோடிக்கு மேல் வருமானம் அடைந்ததக கூறப்படுகிறது .அதுபோக தோனி தன்னுடைய கராஜில் 22 விலை உயர்ந்த பைக்க்குகளையும் குவித்து வைத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.