கேப்டன் கூல் தோனியின் பிட்னஸ் ரகசியம் இதுதான்..!

captaincool
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி,கிரிக்கெட் தொடரில் 3 தரப்பு உலக கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர். தோனி குறித்து பல்வேறு விமர்சங்கள் வந்தாலும், அதனை என்றும் பொருட்படுத்தாமல் கூலாக இருந்து வருகிறார், அதனால் தான் இவரை கேப்டன் கூல் என்றும் அழைத்து வருகின்றனர்.

training

- Advertisement -

இவை எல்லாம் தாண்டி இந்த வயதிலும் தனது உடலை பிட்டகா வைத்து வருகிறார் தோனி. சமீபத்தில் நடந்த யோ யோ டெஸ்டில் பல இளம் வீரர்கள் தேர்வு பெற முடியாமல் திணறிய போது தோனி அந்த டெஸ்டை அசால்ட்டாக பாஸ் செய்து விட்டார். அவ்வளவு ஏன் சென்னை அணியில் விளையாடிய அம்பதி ராயுடு கூட இந்த யோ யோ டெஸ்டில் தேர்வாகவில்லை. தோனியின் பிட்னஸ் ஒரு சில இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் தான் இருக்கிறது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க பல வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்னர். இதில் நம்ம தல தோனியும் இருக்கிறார். இந்த தொடரில் பங்குபெருவதற்காக இப்போதிருந்தே தனது பயிற்சியை தொடங்கி விட்டார் தோனி.

dhonitrain

இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட தோனி தற்போது தனியாக பயிற்சி எடுத்து வருகிறார். கடந்த சில தினங்களாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் தோனி. காலையில் மட்டும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக பயிற்சியில் ஈடுபடுகிறார். தோனிக்கு ஷார்த்துள் தாகுர் பந்து வீசியுள்ளார். அப்போது தாகுருக்கு ஒரு சில அலையோசனைகளையும் வழங்கினராம் தோனி.

Advertisement