அஷ்வின் ? லயன் ? இந்த இருவரில் யார் சிறந்த ஸ்பின்னர் – பிராட் ஹாக் சர்ப்பிரைஸ் பதில் இதோ

Hogg
- Advertisement -

தற்போது உள்ள அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களின் ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் ஆகிய இருவரில் யார் சிறந்த பந்துவீச்சாளர் என்று. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளிலும் 123 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டில் இருக்கும் இவர் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலளித்து வருகிறார்.

Lyon

- Advertisement -

இந்திய வீரர்களை போலவே இவரும் தனது நாட்டில் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி உள்ளார். இவரும் சமூகவலைத்தளத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் மற்றும் இந்தியாவின் ரவிசந்ரன் அஸ்வின் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர்? யார் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்? என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த பிராட் ஹாக் கூறுகையில் : என்னை பொறுத்தவரையில் ரவிசந்திரன் அஸ்வினை விட நாதன் லயன் சென்ற வருடம் சுழற்பந்து வீச்சாளராக நன்றாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் இருவருமே தங்கள் விளையாட்டை மேம்படுத்த எப்போதும் உழைத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

lyon 2

ஆனால் உண்மையில் இருவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் சிறந்தவர் என்று தெரிகிறது. ஏனெனில் இதுவரை இந்திய அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 365 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியான் 96 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 390 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்தியாவிற்கு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். தற்போது அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் அஸ்வின். கும்ளே 619 விக்கெட்டுகள், கபில்தேவ் 434 விக்கெட்டுகள், ஹர்பஜன்சிங் 17, விக்கெட்டுகளையும் அஸ்வின் 365 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Lyon

இருப்பினும் அஷ்வின் இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டது போன்று வெளிநாட்டு மைதானங்களில் செயல்படவில்லை. ஆனால் லயன் அனைத்து நாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இதனை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு பதிலளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement