யுவ்ராஜ், ரெய்னா, கோலி, ஜடேஜா இந்த நால்வரில் சிறந்த பீல்டர் இவர்தான் – பிராட் ஹாக் கணிப்பு

Fielder
- Advertisement -

யுவராஜ் சிங், ரவிந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய நான்கு வீரர்களில் யார் மிகச்சிறந்த பீல்டர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இந்திய அணி ஒரு காலத்தில் பேட்டிங்கிற்க்கு மட்டுமே பெயர் பெயர்போனது. பீல்டிங்கிலும், பந்துவீச்சிலும் பெரிதாக பெயர் சொல்லும் அளவிற்கு இருந்தது இல்லை. அதன் பின்னர் கங்குலி தலைமையேற்றார் . அந்த அணியில் யுவராஜ் சிங், முகமது கைஃப் போன்ற வீரர்கள் ஆடுகளத்தில் பீல்டிங்கில் வில்லாதி வில்லனாக இருந்தார்கள்.

Jadeja

- Advertisement -

அவரைத் தொடர்ந்து மகேந்திரசிங் தோனி அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது காலத்திலும் பில்டிங்கில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து அணிக்குள் கொண்டு வந்தார் . அப்போதுதான் ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே , கே எல் ராகுல் என பல வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்தனர்.

பின்னர் கிரிக்கெட் உலகின் அரசனாக வலம் வரும் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு உடல் பகுதியில் பெருமளவில் கவனம் செலுத்தினார் . வீரர்கள் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே பீல்டிங்கில் நன்றாக செயல்பட முடியும் என்று அவர் நினைத்தார்.
இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் ஒவ்வொருவரும் தங்களது தனி திறமையாக பீல்டிங்கை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிராட் ஹாக் ட்விட்டரில் ரசிகர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது.. ரசிகர் ஒருவர் யுவராஜ்சிங், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்களில் யார் மிகச் சிறந்த பீல்டர் என்று கேள்வி கேட்டார்.

- Advertisement -

இதற்கு பதிலளித்த பிராட் ஹாக் நால்வருமே மிகச்சிறந்த வீரர்கள் தான். ஆனால் இந்த நால்வரில் ரவீந்திர ஜடேஜா தான் தற்காலத்திற்கு பெஸ்ட் ஆன பீல்டர் என்று கூறியுள்ளார்.

இந்த நால்வருமே உள்வட்டத்தில் சிறந்த பீல்டர்கள் என்றும் அதில் ரவீந்திர ஜடேஜா தனக்கு மிகவும் பிடித்த பீல்டர் என்று பிராட் ஹாக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்திற்கேற்ப அனைவரும் சிறப்பான பீல்டர்கள் தான் ஆனால் ஜடேஜா உடற்தகுதி, பந்துவீச்சு, பேட்டிங் என உண்மையான ஒரு ஆல்ரவுண்டர் என்பதை நாம் மறுக்க முடியாது.

Advertisement