“இனி இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது”- மெக்ராத் கருத்து

mcgrath

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக கடந்த 15 வருடமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் திகழ்ந்து வருகிறார். இவரது பவுலிங் இன்னும் கூட வேகம் குறையவில்லை என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சமீபத்தில் கூறி இருந்தார். இவரது வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றால் எதிரணி வீரர்கள் தடுமாறுவதை நாம் பலமுறை கண்டிருப்போம்.

jimmy

இவர் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்த உள்ளார். அதாவது, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக தற்போது மெக்ராத்(563) உள்ளார். 141டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 557விக்கெட்டுகளை கைப்பற்றி அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். ஆண்டர்சன், மெக்ராத்தின் சாதனையை முறியடிக்க இன்னும் 7 விக்கெட்கள் தேவை.

வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால், மெக்ராத் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறுவார். இதுகுறித்து மெக்ராத் அளித்த பேட்டியில் “ஆண்டர்சன் என்னுடைய சாதனையை முறியடித்தால் அதன்பிறகு வேறு எந்த வேகப்பந்து வீச்சாளராலும் அதனை செய்ய முடியாது”. ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பொக்கிஷம் என்று புகழாரம் சூட்டினார்.

jimmy 2

T20 போட்டிகளின் வரவினால் டெஸ்ட் போட்டிகள் மெல்ல மெல்ல குறைய தொடங்கி விட்டன. எனவே, இனிவரும் வீரர்கள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது. மெக்ராத் கூறும் இந்த கருத்து சரியாகத்தான் இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.