சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சுழற்பந்து வீச்சாளர்..! பின்னடைவை சந்திக்குமா அந்த அணி..!

jadeja
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அணி தற்போது தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
Rangana Herath
சமீபத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் காயம் ஏற்பட்டதால் கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் ஹெராத் பங்கு பெறவில்லை. இந்நிலையில் கிரிக்கெட்டின் மூன்று விதமான போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற ஹெராத் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் இது குறித்து பேசிய இலங்கை அணியின் ஹெராத் “இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் தான் என்னுடைய கடைசி தொடராக இருக்கலாம். தற்போதைக்கு என்னுடைய முடிவ இதுதான். அணைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெரும் தருணம் வரும்.
rangana
என்னுடைய தருணம் இது தான். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நான் கிரிக்கெட் விளையாடி விட்டேன் என்பதை நினைத்து பெருமையடைகிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான தொடருக்கு பின்னர் ஹெராத் சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

- Advertisement -
Advertisement