இவரின் அனுபவம் தான் தொடரை வெல்வதற்கு காரணம். நாங்கள் இதோட நிறுத்தப்போவதில்லை – ஆட்டநாயகன் பேட்டி

Nz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று மவுண்ட் மாங்கனி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 112 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

indvsnz

- Advertisement -

அதனை தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைக் குவித்து அட்டகாசமான வெற்றியை பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை வாஷ் அவுட் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் வீரர்களான நிக்கோலஸ், கிராண்ட் ஹோம் மற்றும் குப்தில் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ஹென்ரி நிகோலஸ் 103 பந்துகளில் அபாரமாக 80 ரன்கள் குவித்தார். இதற்காக இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது . ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய அவர் : டி20 தொடரை இழந்த பிறகு மீண்டு வந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது நன்றாக இருக்கிறது.

Taylor

இன்று கப்டில் அற்புதமாக ஆடினார். நாங்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்தோம் இந்த தொடரை வென்றது எங்களுக்கு மகிழ்வாக இருக்கிறது இவ்வாறு கூறினார் என்று நிக்கோலஸ். இந்த ஒருநாள் தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற விரும்புகிறோம் என்று நிக்கோலஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement