3-4 மாசம் என்ன பண்ணீங்க ? வருண் சக்ரவர்த்திக்கு நேரடியாக கேள்வி எழுப்பிய – தமிழக வீரர்

Varun

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தேர்வாகி இருந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி உடற்தகுதி சோதனையின்போது தோல்வி அடைந்தார். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடருக்கு t20 இந்திய அணியில் தேர்வாகி இருந்தும் சக்ரவர்த்தி தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

varun 1

அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடருக்கு முன்னர் காயத்தில் இருந்து விடுபட்டாலும், உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற தவறி தற்போது இந்த தொடரில் விளையாடும் அற்புதமான வாய்ப்பையும் அவர் இழந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் தமிழக வீரரான ஹேமங் பதானி வருன் சக்ரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்தில் : மூன்று நான்கு மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்துள்ளீர்கள். அந்த சமயத்தில் என்னதான் செய்து கொண்டிருந்தவர்கள் ? உங்களை முன்கூட்டியே நீங்கள் தயார் படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என அவர் காட்டமாக பதிவை வெளியிட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அப்படி கஷ்டப்பட்டு பெரும் இந்த வாய்ப்பு காயங்களால் தள்ளிப்போவது ஒரு வருத்தமான விஷயம்தான்.

- Advertisement -

Varun

மேலும் அனைவரும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் கிடைத்த வாய்ப்புகளை இப்படி வீணடிக்க வேண்டாம் என்றும் எப்பொழுது அணியில் இருந்து அழைப்பு வந்தாலும் விளையாட தயாராக இருங்கள் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.