
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் மே 6-ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.
அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்றிச் கிளாஸன் 69 ரன்களையும், இஷான் கிஷன் 55 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்தில் இருந்த கே.எல் ராகுல் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக 445 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்த கே.எல் ராகுலை சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா 6 ரன்கள் எடுத்திருந்தபோது பின்னுக்கு தள்ளி ஆரஞ்சு தொப்பியை தன்வசம் ஆக்கினார். இறுதியில் இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 35 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : இவரை எப்படி கேப்டனாக போட்டீங்க? ரியான் பராக் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த – சஞ்சய் மஞ்சரேக்கர்
இதன் காரணமாக அபிஷேக் ஷர்மா இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 475 ரன்கள் குவித்திருந்தார். இப்படி ஆரஞ்சு தொப்பி இவர் வசம் வந்த சில நிமிடங்களில் இந்த போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய ஹென்றிச் கிளாசன் 69 ரன்களை அடித்ததன் மூலம் அவரையும் கடந்து (476+ ரன்கள்) ஆரஞ்சு தொப்பியை தன் வசப்படுத்தினார். இப்படி ஒரே போட்டியில் இரண்டு முறை ஆரஞ்சு தொப்பி கை மாறிய சம்பவம் இந்த போட்டியில் நிகழ்ந்துள்ளது.