விராட் கோலி பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிட்டாரு, இந்திய வீரரை வெளிப்படையாக பாராட்டும் டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்த போட்டிகளில் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா அடுத்ததாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த இந்தியா 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. அதனால் சமனடைந்த அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை துரத்தும் போது ராகுல், ரோஹித் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

Suryakumar Yadav 1

- Advertisement -

அதனால 30/2 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலியுடன் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் அதிரடியாக 69 (36) ரன்களை விளாசி வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கடுமையான போராட்டத்திற்குப் பின் 30 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் அதிகபட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருவெடுத்துள்ளார்.

விராட் – பாபரையும் மிஞ்சிட்டாரு:
போட்டியின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதற்காக அஞ்சாமல் பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை துவக்கி மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் ரன்களை குவிக்கும் அவர் மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடிக்கும் திறமை பெற்றுள்ளார். அதனால் “இந்தியாவின் ஏபிடி” என்று ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் பாராட்டும் இவர் மளமளவென ஐசிசி பேட்டிங் தர வரிசையில் முன்னேறி உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்லும் பசியுடன் எதிரணிகளை வெளுத்து வாங்கி வருகிறார்.

Virat Kohli Suryakumar Yadav

இந்நிலையில் டி20 கிரிக்கெட் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் பாபர் அசாமை ஆகியோரையும் மிஞ்சும் அளவுக்கு சூர்யகுமார் யாதவ் அசத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா வெளிப்படையாக பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சூர்யகுமார் யாதவ் சிறந்தவர் என்பதை நான் கடந்த பல மாதங்களாக சொல்லி வருகிறேன். அதிலும் 360 டிகிரியில் பேட்டிங் செய்யக்கூடிய அவரது திறமைக்கு வானமே எல்லையாகும். அவர் பேட்டிங் செய்யும் விதம் நான் விளையாடுகிறேன் என்பதை அறிவிப்பது போல் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அவர் அபாரமாக செயல்பட்டார்”

- Advertisement -

“அவர் மற்றவர்களை விட வித்தியாசமாக விளையாடுவதால் நிச்சயம் பெரிய வீரராக வருவதற்கு உறுதியான வாய்ப்புள்ளது. அவர் பேட்டிங் செய்யும் விதம் உலகின் மற்ற சிறந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை ரசிகர்கள் மறக்கும் அளவுக்கு கவர்ச்சியாக உள்ளது. இங்கு விராட் கோலி நிறைய ரன்களை அடிக்கலாம், பாபர் அசாம் வெற்றிகரமாக செயல்படலாம். ஆனால் சூர்யகுமார் யாதவ் அவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளப் போகிறார்” என்று கூறினார். அவரைப்போலவே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் எதிரணிக்கு ஆபத்தாக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய கோச் ஆண்ட்ரூ மெக்டனால்ட் சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

Kaneria

முன்னதாக இத்தொடர் துவங்கும்போது ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிடம் இந்திய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தடுமாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் 2வது போட்டியில் தடுமாறினாலும் எஞ்சிய 2 போட்டிகளில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்தி பெரிய ரன்களை குவித்தார். அது பற்றி டேனிஷ் கனேரியா மேலும் பேசியது பின்வருமாறு. ” நிறைய பேர் ஆடம் ஜாம்பாவிடம் விராட் கோலி பெட்டிப்பாம்பாக அடங்குவார் என்று பேசினார்கள். ஆனால் விராட் கோலி அவரை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்”

“மேலும் ரோகித், ராகுல் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் தடுமாறிய இந்தியாவை விராட் – சூரியகுமார் ஆகியோர் மீட்டெடுத்து வெற்றி பெற வைத்தனர். மேலும் சூர்யகுமார் யாதவுக்கு விராட் கோலி முக்கிய ஆலோசனைகளை கொடுத்தார். அந்த வகையில் அவர்களிடையே நல்ல புரிதல் உள்ளது. அந்த இருவருக்கு எதிராக ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் இதேபோல் பேட்டிங் செய்தால் நிச்சயம் இந்தியா உலகக் கோப்பையில் அனைத்து அணிகளையும் தோற்கடிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement