பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள – 2 அற்புதமான ஜாம்பவான்கள்

Pak-1
- Advertisement -

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணியும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலையும், ரிசர்வ் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை வீரர்கள் பட்டியல் வெளியான சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.

Misbah-1

- Advertisement -

இப்படி டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் ராஜினாமா செய்து வெளியேறியது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு பதிலாக புதிய பயிற்சியாளர்களை தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குனர் ரமேஷ் ராஜா வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இடைக்கால பயிற்சியாளர்களாக 2 சிறப்பான முன்னாள் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹேடன் மற்றும் பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னான் பிலாண்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Hayden 2

Philander-1

ஒருபக்கம் ஹேடன் பேட்டிங்கில் 14 ஆயிரம் ரன்களுக்கு மேல் சர்வதேச அரங்கில் குவித்துள்ளார். அதேபோன்று பிலாண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி அனுபவமிக்க 2 ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமித்தது பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்றே கூறலாம்.

Advertisement