இவர் அணியில் இருந்தால் நிச்சயம் வெற்றிதான்..! மிகப்பெரிய சொத்து இவர்..! புகழும் பயிற்சியால்..! – யார் தெரியுமா..?

bumrah

இந்திய அணி இன்னும் சில நாட்களில் கிரிக்கெட் போட்டிகளை விளையாட இங்கிலாந்து செல்லவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரும் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் புவனேஸ்வர் குமார் மிகவும் சிறப்பாக விளையாடுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான டாம் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
bhuvanes
ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய தெம்பில் இருக்கிறது இந்திய அணி. இந்த நம்பிக்கையோடு வரும் ஜூலை மாதம் 3 ஆம் ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து எதிரான தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு இடையான போட்டியில் புவனேஸ்வர் குமார் 2014 ஆம் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடியது போலவே, இந்த தொடரிலும் விளையாடுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் முன்னாள் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சிலருமான டாம் மோடி புகழாரம் சூடியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் தெரிவித்த விடயம் என்னவெனில்
kumar
“இந்திய அணியின் பேட்டிங் பொறுத்த வரை எந்த ஒரு குறையும் இல்லை. அதே போல இங்கிலாந்து மண்ணில் இந்திய பந்துவீச்சாளர்கள் எளிதாக பொருந்தி விடுவார்கள். அதிலும் குறிப்பாக புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசுவார், அவர் ஒரு பர்ஸ்ட் க்ளாஸ் பந்துவீச்சாளர். இங்கிலாந்து பிட்ச் அவருக்கு நன்றாக பொருந்தி விடும். அவர் பந்துகளை சிறப்பான லெந்திலும், வேகத்திலும் வீசுவார். இந்த தொடரில் அவரது பங்கு அதிகம் இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.