IND vs ENG : தலை வணங்குகிறோம் ஆனால் அஞ்சவில்லை, ரிஷப் பண்ட்தை பாராட்டிய இந்தியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து கோச் – முழுவிவரம்

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. கடந்த வருடம் விராட் கோலி தலைமையிலான இந்தியா ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சந்தித்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 412 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 98/5 என ஆரம்பத்திலேயே இந்தியா திணறியது.

அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 6-வது விக்கெட்டுக்கு நங்கூரமாக ஜோடி சேர்ந்து 222 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்கள். அதில் ஒருபுறம் ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் போன்ற இங்கிலாந்து பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக புரட்டி எடுத்த ரிஷப் பண்ட் வெறும் 89 பந்துகளில் சதமடித்து 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து டி20 இன்னிங்ஸ் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பண்ட் மாஸ்:
அவருடன் அற்புதமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு 13 பவுண்டரியுடன் வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக சதமடித்து 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் ஸ்டுவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரில் 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என 35 ரன்களை தெறிக்கவிட்டு மொத்தம் 36* (16) ரன்களை விளாசிய ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற புதிய உலக சாதனை படைத்தது அனைவரையும் பிரமிக்க வைத்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இப்போட்டியில் 98/5 என்ற மோசமான நிலையில் இந்தியா திணறிய போது கொஞ்சம் கூட பயமின்றி போராடும் வகையில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி உட்பட பலரின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்த அவர் ஏராளமான சாதனைகளையும் படைத்தார்.

- Advertisement -

தலைவணங்குகிறோம் ஆனால்:
கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் திணறிய இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடி வெற்றிகளை குவிக்கும் வலுவான அணியாக மாறியுள்ளதால் அதை சமாளிக்க கேப்டன் ரோகித் சர்மாவும் இல்லாத இந்தியா இப்போட்டியில் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சொல்லப்போனால் நியூசிலாந்துக்கு எதிராக வென்றதை போல இப்போட்டியிலும் இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஏற்கனவே கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்திருந்தார். ஆனால் இப்போட்டியில் எங்களாலும் அதிரடியாக விளையாட முடியும் என்று காட்டிய ரிஷப் பண்ட் தாம் விளையாடிய விதத்தால் இங்கிலாந்துக்கு மறைமுகமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டத்திற்கு தலை வணங்குகிறோம் என்று தெரிவித்துள்ள இங்கிலாந்தின் துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் அதற்காக அஞ்சப் போவதில்லை என்று மீண்டும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களின் பின்பலம் இந்தியாவுக்கு எதிராக நீண்ட நேரம் இருந்ததாக நான் உணரவில்லை. ஆனால் ரிஷப் பண்ட் விளையாடிய விதத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். நீங்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக இருந்தால் அவர்களால் உலகத்தரம் வாய்ந்த விஷயங்களை செய்ய முடியும்”

“மேலும் 4-வது இன்னிங்சில் எவ்வளவு இலக்கை துரத்த வேண்டும் என்பதை நினைத்து நாங்கள் பயப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டில் நாங்கள் விளையாடிய விதம் முதல் இன்னிங்சில் எதிரணி என்ன இலக்கை நிர்ணயிக்கப் போகிறது என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

அதாவது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி நிர்ணயித்த 250க்கும் மேற்பட்ட இலக்கை ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் அசால்ட்டாக அதிரடியாக சேஸிங் செய்து 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். அதனால் இப்போட்டியில் ரிஷப் பண்ட் எப்படி விளையாடியிருந்தாலும் கடைசியில் இலக்கு எதுவாக அதை நினைத்து கவலைப் படாமல் வழக்கம் போல அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றி பெறுவோம் என்று பால் காலிங்வுட் இந்தியாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

Advertisement