அந்த அனுபவம், வலி தெரியாததே இளம் தெ.ஆ அணி.. இந்தியாவை வீழ்த்துவதற்கான சாதகத்தை தரும்.. அம்லா பேட்டி

Hasim Amla
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அத்தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபாடா, கேசவ் மகாராஜ் போன்ற தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர். இருப்பினும் பொதுவாக வெளிநாட்டு அணிகள் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமாகும். அதனாலேயே 2010க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் தென்னாப்பிரிக்கா திணறி வருகிறது.

- Advertisement -

அனுபவமின்மையின் சாதகம்:

அத்துடன் சுப்மன் கில் தலைமையில் புதிதாக உருவாகத் துவங்கியுள்ள இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. அதே போல இத்தொடரில் தென்னாப்பிரிக்காவின் சவாலை சமாளித்து இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. இந்நிலையில் தற்போதைய தென்னாபிரிக்க அணியில் பல வீரர்கள் இதற்கு முன் இந்தியாவில் விளையாடியதில்லை என்று முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார்.

அதனால் இந்தியாவில் கடந்த காலங்களில் சந்தித்த தோல்விகளின் வலி அவர்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே அனுபவமற்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியாவில் பயமின்றி புத்துணர்ச்சியுடன் விளையாடி வெற்றி காண்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அம்லா பேசியது பின்வருமாறு. “தென்னாபிரிக்க அணியில் சில அனுபவமற்ற வீரர்கள் உள்ளனர்”

- Advertisement -

அம்லா நம்பிக்கை:

“அவர்களில் சிலர் இந்தியாவுக்கு முதல் முறையாக வந்துள்ளார்கள் என்பது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமானதாக அமையலாம். ஏனெனில் நீங்கள் இதற்கு முன் விளையாடாத இடத்திற்கு புதிதாக விளையாட வந்துள்ளீர்கள். நீங்கள் புதிதாக வரும் போது கடந்த தொடர்களில் சந்தித்த தோல்விகளின் பாரம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் நீங்கள் மிகுந்த புத்துணர்ச்சியுடன் விளையாட வந்திருப்பீர்கள்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி.. தொடரை அங்க மாத்துறோம்.. தலைவர் நக்வி அறிவிப்பு

“அது இம்முறை தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக வேலை செய்யலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல இம்முறை ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ், டோனி டீ ஜோர்ஸி, தேவால்ட் ப்ரேவிஸ், சைமன் ஹார்பர், கோர்பின் போஸ்க், சேனுரான் முத்துசாமி, ஜுபாயர் ஹம்ஸா, வியான் முல்தார் போன்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர். அதனால் அவர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement