விக்கெட் எடுத்து ஆக்ரோஷத்தை காண்பித்த ராகுல் சாகர். பாராட்டிச்சென்ற இலங்கை வீரர் – நடந்தது என்ன ?

Hasaranga

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின்போது இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியின் போது இந்திய வீரர் ராகுல் சாகர் மற்றும் இலங்கை அணி வீரர் ஹசரங்கா ஆகிய இருவரும் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி 15வது ஓவரில் போது தனது கடைசி ஓவரை வீசிய ராகுல் சாகர் கடைசி பந்தில் முக்கிய வீரரான ஹசரங்காவை ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

- Advertisement -

அந்த ஓவரின் முடிவில் இலங்கை அணி 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மேலும் இலங்கை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 39 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. அவ்வேளையில் தனது நான்காவது ஓவரின் கடைசி பந்தில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்திய ராகுல் சாகர் அந்த விக்கெட் பெரிய விக்கெட் என்பதனால் சற்று ஆக்ரோஷமாக அந்த விக்கெட்டை கொண்டாடினார்.

ஆனால் எதிர் திசையில் அவுட்டான ஹசரங்கா அவர் ஆக்ரோஷமாக நடந்து கொணடாலும் கோபப்படாமல் ராகுல் சாகர் வீசிய பந்து மிகச் சிறப்பாக இருந்தது என்று கூறி தனது பேட்டின் மீது கையால் தட்டி “கை தட்டுவது போல” தனது ரியாக்ஷனை காண்பித்து சென்றார்.

- Advertisement -

தான் ஆட்டம் இழந்தும் எதிர் அணியின் வீரர் சிறப்பாக பந்துவீசியதை பாராட்டி சென்ற அவரது இந்த குணம் தற்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement