உலகின் ஆபத்தான பேட்ஸ்மேன்.? இந்த இந்திய வீரரா.? பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி.!

hasan

இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்றாலே இரு நாட்டுக்கும் இடையே உள்ள பகை தான் நம் நினைவுக்கு வரும். அது கிரிக்கெட் விளையாட்டில் இல்லை. சமீபத்தில் ஹசன் அலி அவர்கள் அளித்த பேட்டியில் அவர் சந்தித்த கடினமான, ஆபத்தான பேட்ஸ்மேன் யார் என்று கூறியுள்ளார். ஹசன் அலி பாகிஸ்தான் அணியின் வளர்ந்து வரும் அதிவேக பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

virat kohli

ஹசன் ஆலி தற்போது பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். இதற்கு உதாரணமாக, 2017ல் நடந்த சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரை கூறலாம். இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினர். இந்நிலையில் அவர் சந்தித்த கடினமான பேட்ஸ்மேன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்று கூறியுள்ளார்.

கோலிக்கு பந்து எவ்வாறு வீசுவது என்று தனக்கு என்று புரியவில்லை. கண்டிப்பாக அவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு எதிராக பந்து வீசும் போது பதட்டம் ஏற்படுகிறது. என்று அவர் பேட்டியில் கூறினார். மேலும், அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை துபாய் கிரிக்கெட் கிரவுண்டில் எதிர்கொள்கிறது.

kohli

ஆசிய கோப்பையின் போட்டி அட்டவணை மாற்றப்படாது என்று ICC அறிவித்து இருக்கும் நிலையில், ஹசன் அலி கோலி குறித்து கூறி இருப்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து உள்ளது.