என்கிட்ட திறமை இருந்தாலும் இந்தியாவுக்கு விளையாடும் சான்ஸ் கிடைக்க அவர் தான் காரணம்.. ஹர்ஷித் ராணா

- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த அணியில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அதே போல ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காததும் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அந்த அணியில் 22 வயதாகும் ஹர்ஷித் ராணா முதல் முறையாக இந்தியாவுக்காக தேர்வாகி அசத்தியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் 19 விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

கம்பீரின் ஆதரவு:
இந்நிலையில் தன்னிடம் திறமை இருந்தாலும் கௌதம் கம்பீர் கொடுத்த ஆதரவும் ஆலோசனைகளும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்ததாக ஹர்சித் ராணா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டெல்லி உங்களுடைய இதயத்தை உடைக்கலாம். ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை”

“கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் நம்பினேன். ஆனால் வயதுக்குட்பட்ட அணிகளில் கவனிக்கப்படாததால் நான் ஏமாற்றத்தை சந்திக்கும் போதெல்லாம் அறையில் உட்கார்ந்து அழத் தொடங்குவேன். இருப்பினும் எனது தந்தை பிரதீப் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடவில்லை. என்னுடைய இந்த அழகான பயணத்திற்காக நான் 3 நபர்களுக்காக கடமைப்பட்டுள்ளேன்”

- Advertisement -

“முதலில் எனது அப்பா. அதற்கடுத்ததாக என்னுடைய பயிற்சியாளர் அமித் பண்டாரி. அவர்கள் அனைவரையும் விட கௌதம் பையா. கொல்கத்தா அணியில் எனது மனநிலையை கம்பீர் பாய் எப்படி மாற்றினார் என்பதற்கும் இந்த விளையாட்டைப் பற்றிய எனது பார்வையை மாறியதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. உயர் மட்டத்தில் உங்களிடம் தேவையான திறமை இருக்கிறது”

இதையும் படிங்க: பாண்டியாவுக்கு பதில் சூரியகுமார் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்

“ஆனால் அந்தத் திறமையை விட அழுத்தத்தை கையாள்வதற்கு இதயம் தேவைப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் “நீ போட்டிகளை வென்று கொடுப்பாய் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறிய கௌதம் பாய் எனக்கு ஆதரவு கொடுத்தார். ஒரு போட்டியில் நீ அடி வாங்கி நாம் தோல்வியை சந்திப்பது தான் மோசமான தருணமாக இருக்கும் என்று கம்பீர் சொல்வார். அதே சமயம் பயத்தை எதிர்கொள்ளாவிட்டால் உன்னால் எப்படி அதிலிருந்து மேலே வர முடியும்? என்றும் அவர் சொல்வார். எனவே எப்போதும் புதிய நாள் இருக்கும் அங்கே புதிய வாய்ப்புகளில் அசத்துவதற்காக தயாராக வேண்டும் என்று கம்பீர் என்னிடம் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.

Advertisement