
இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி என நான்கு அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அனைவரும் பங்கேற்று விளையாடி வருவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்திய சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்தியா சி அணியை எதிர்த்து விளையாடி வரும் இந்தியா டி அணி போட்டியின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது சிஎஸ்கே ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
ஏனெனில் இந்தியா சி அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை ஹர்ஷித் ராணா வீழ்த்தி இருந்தார். அப்போது தான் ஆட்டம் இழந்த விதத்தை குறித்து ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி ருதுராஜ் கெய்க்வாட் நடந்து சென்றார்.
அவ்வேளையில் அவரை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்தவாறு அந்த விக்கெட்டை ஹர்ஷித் ராணா கொண்டாடியிருந்தார். இப்படி அவர் செய்த இந்த கொண்டாட்டம் தான் சிஎஸ்கே ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.
ஏனெனில் தற்போதைய சி.எஸ்.கே அணியின் கேப்டனும், இந்தியாவின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற பெரிய வீரரை அவமதிக்கும் விதத்தில் ஹர்ஷித் ராணா எப்படி கொண்டாடலாம்? அவருக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : இந்திய அணியில் கம்பீருக்கு பெருசா சவால் ஒன்னுமில்ல.. காரணம் இது தான்.. சேவாக் வெளிப்படை
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது இதே போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.