- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இணைந்த கம்பீரின் செல்லப்பிள்ளை – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

3 ஆவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இணைந்த வீரர் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 20-ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக தற்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் என இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஜூன் 19-ஆம் தேதி இந்திய அணியில் ஒரு புதிய வீரர் இணைவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை காயம் காரணமாக தவறவிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அதன்பிறகு நடைபெற்ற 2026 ஐ.பி.எல் தொடரையும் தவறவிட்டார்.

இப்படி அடுத்தடுத்த முக்கிய தொடர்களை தவறவிட்டு காயத்திற்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்த அவர் தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டதால் அவரை உடனடியாக இந்திய அணியில் பி.சி.சி.ஐ இணைத்துள்ளது. எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அவர் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வெளியேறும் ஹேமங் பதானி.. உள்ளே வரும் யுவ்ராஜ் சிங்.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் – அதிரடி மாற்றம்

ஏற்கனவே வெளியான அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த மாதம் இறுதியில் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கு முன்னதாகவே அவர் சென்னையில் இந்திய அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -