இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை வெளியிட்ட – ஹர்ஷா போக்ளே

Bhogle

இந்தியாவின் முன்னனி வீரர்கள் அடங்கிய டெஸ்ட் அணியானது வருகிற ஜூன் மாதம் 2ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் ஜூன் 18ஆம் தேதி மோதவிருக்கிறது. இந்த இறுதி போட்டி முடிவடைந்ததும் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரானது ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையில் இருக்கும் ஜூலை மாதத்தை வீணாக்க விரும்பாத பிசிசிஐ, அந்த மாதத்தில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

IND

இந்த தொடரில் இங்கிலாந்து செல்லும் வீரர்கள் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்பதால், இலங்கை செல்லும் இந்திய அணியில் நிறைய புதுமுக வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான தனது இந்திய அணியை அறிவித்திருக்கிறார், இந்தியாவின் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இந்திய அணியை அதில் தேர்வு செய்திருக்கிறார். அவருடைய இந்திய அணி பின்வருமாறு,

- Advertisement -

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் சிறந்த ஓப்பனிங் இணையாக கலக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வா ஷா ஆகியோரை தனது அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்திருக்கிறார். ஒன்டவுன் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்திருக்கும் அவர், ஆச்சரியமளிக்கும் விதமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார். அவருடைய அணியில் இஷான் கிஷானுக்கு இடமில்லை. மிடில் ஆர்டர் இடத்திற்கு சஞ்சு சாம்சனுடன், சன் ரைசர்ஸ் ஐதாராபாத் அணியின் வீரரான மனிஸ் பாண்டேவையும் இணைத்திருக்கிறார். இந்த ஐபிஎல்லில் சில நல்ல இன்னிங்சுகளை விளையாடியதால் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டதாக காரணம் கூறியிருக்கிறார்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியாவும், க்ருணால் பாண்டியாவும் இடம் பிடித்திருக்கிறார்கள். அவருடைய அணியில் க்ருணால் பாண்டியாவை தவிர்த்து மேலும் இரு ஸ்பின்னர்களாக யுஸ்வேந்திர சாஹாலையும், குல்தீப் யாதவையும் சேர்த்திருக்கிற அவர் முழு நேர வேகப் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தீபக் சஹார் மற்றும் புவனேஸ் குமார் ஆகியோரை மட்டுமே தேர்வு செய்திருக்கிகார். இது அவருடைய ஒரு நாள் அணியாக இருக்கிறது. அவருடைய டி20 அணியில், மனிஷ் பாண்டேவிற்கு பதிலாக ராகுல் திவேட்டியாவையும், குல்தீப் யாதவிற்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியையும் தேர்வு செய்திருக்கிறார். மேலும் யுஸ்வேந்திர சாஹால் அல்லது ராகுல் சஹார் இருவரில் ஒருவருக்கு அணியில் வய்ப்பு கொடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Chahal

ஹர்ஷா போக்லேவின் ஒரு நாள் அணி:

01.ஷிகர் தவான் 02. ப்ரித்வி ஷா 03. சூர்யகுமார் யாதவ் 04. சஞ்சு சாம்சன் 05. மனிஷ் பாண்டே 06. ஹர்திக் பாண்டியா 07. க்ருணால் பாண்டியா 08. யுஸ்வேந்திர சாஹால் 09. குல்தீப் யாதவ் 10. தீபக் சஹார் 11. புவனேஷ் குமார்.

அவருடைய டி20 அணி:

01. ஷிகர் தவான் 02. ப்ரித்வி ஷா 03. சூர்யகுமார் யாதவ் 04. சஞசு சாம்சன் 05. ஹர்திக் பாண்டியா 06. க்ருணால் பாண்டியா 07. ராகுல் திவேட்டியா 08. வருண் சக்கரவர்த்தி 09. தீபக் சஹார் 10. புவேனேஷ் குமார 11. ராகுல் சஹார்/யுஸ்வேந்திர சஹால்.

Advertisement