கிரிக்கெட் முடிஞ்சதும் அஷ்வினுக்கு ஏற்ற வேலை இதுதான். அவர் நிச்சயம் இதுக்கு சரிப்பட்டு வருவார் – ஹர்ஷா போக்ளே கணிப்பு

Bhogle
- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். தற்போது வரை 71 டெஸ்ட் போட்டிகள், 111 ஒருநாள் போட்டிகள் 46 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். தற்போதைய உலகின் மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னராகவும் இருக்கிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இவாறு சிறப்பாக விளையாடினாள் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராகவும் மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகபலரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ashwin

இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்பதை விட சரியாக கால்குலேட் செய்து கணிதப்படி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். ஆடுகளத்தின் தன்மை, ஆடுகளம் எவ்வளவு மீட்டர் உள்ளது, பந்துவீச்சாளர் எவ்வளவு தூரம் ஓடி வர வேண்டும், எவ்வளவு கோணம் பந்து திரும்பினால் விக்கெட்டுகள் விழும் என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக கூறுவார் . அந்த அளவிற்கு கணிதப்படி கிரிக்கெட் விளையாடும் ஒரு சர்வதேச வீரர் இவர்.

- Advertisement -

அடிப்படையில் இவர் ஒரு பொறியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திறமையெல்லாம் எதிர்காலத்தில் இவருக்கு உதவும் என்பது போல் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் நேரலையில் பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ஹர்ஷா போக்லே கூறியதாவது…

அஸ்வின் மற்றும் மஞ்ரேக்கர் ஆகியோருக்கு இடையிலான உரையாடலை மிகவும் இரசித்தேன். அஸ்வின் மிக ஆர்வத்துடன் கேள்விகளை கேட்டார். அதற்கு வெளிப்படையாக பதிலளித்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதனை நான் 1991-ஆம் ஆண்டு கணித்தேன். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ரவிசாஸ்திரி ஆசிரியர் வரும் மிகச் சிறந்த வர்ணனையாளராக வருவார்கள் என்று கூறினேன்.

- Advertisement -

தற்போது அவ்வாறு தான் இருக்கிறார்கள். அதேபோல் தற்போது கூறுகிறேன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சிறந்த வர்ணனையாளராக வருவார். அவர்களைப் போலவே இவரும் நன்றாக பேசுகிறார் என்று கூறியுள்ளார் ஹர்ஷா போக்லே. கிரிக்கெட் உடனான பிணைப்பு போக்லேவுக்கு இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் ககுறித்த அறிவு அதிகம் எனவே உலகஅளவில் அவருக்கு வரவேற்பு அதிகம்.

Ashwin

இந்நிலையில் தற்போது அவரே அஷ்வினை சிறந்த வரணையாளராக மாற வாய்ப்புள்ளதாக கூறியதால் அவரை வரணனையாளராக பார்க்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சில ஆண்டுகள் அவருக்கு கிரிக்கெட் மீதமிருப்பதால் அதன்பின்னரே அதற்கான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement