- Advertisement -
இந்திய கிரிக்கெட்

50 ஓவரில் 576 ரன்ஸ்.. இதுக்காக இந்தியா கவலைப்படனுமே தவிர கொண்டாடக் கூடாது.. ஹர்ஷா போக்லே பதிவு

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி பல்வேறு நகரங்களில் துவங்கியது. அந்தத் தொடரில் பிளேட் பிரிவில் இடம் வகிக்கும் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் பீகார் அணிகள் மோதிய போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் புள்ளப்பூச்சியாக கருதப்படும் அருணாச்சலப் பிரதேசத்தை சூறையாடிய பீகார் 397 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பீகார் 50 ஓவரில் 574/6 ரன்கள் குவித்து அசத்தியது. அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற உலக சாதனையை பீகார் படைத்தது. இதற்கு முன் 2021 விஜய் ஹசாரே கோப்பையில் இதே அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக தமிழ்நாடு 502 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும்.

- Advertisement -

கொண்டாட ஒன்னுமில்ல:

அந்த சாதனையை இப்போட்டியில் உடைத்த பீகார் அணிக்கு அதிகபட்சமாக 14 வயதாகும் வைபவ் சூர்யவன்சி 16 பவுண்டரி 15 சிக்ஸருடன் 190 (84) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 59 பந்துகளில் 150 ரன்கள் அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150+ ரன்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார். இதற்கு 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

அதே போல அருணாச்சலப் பிரதேசத்தை தம்முடைய பங்கிற்கு அடித்து நொறுக்கிய கேப்டன் ஷஹீபுல் கானி 32 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

ஹர்ஷா போக்லே கவலை:

இந்நிலையில் 50 ஓவரில் 574 ரன்கள் அடிப்பதை நினைத்து கவலைப்பட வேண்டுமே தவிர கொண்டாடக்கூடாது என்று இந்தியாவின் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் தரம் மோசமாக இருப்பதாக அவர் கவலைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பின்வருமாறு.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி ஜெயிக்கனும்னா ரவி சாஸ்திரி தான் ஹெல்ப் பண்ணனும் – மான்டி பனேசர் கருத்து

“பீகார் 50 ஓவரில் 574 ரன்கள் அடித்துள்ளது கொண்டாடப்பட வேண்டிய விஷயமல்ல. மாறாக இது நமது உள்நாட்டு கிரிக்கெட்டின் சில தரத்தின் கவலைக்குரிய குறிகாட்டியாகும்” என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறுவது போல பீகார் அணியை விட அருணாச்சல பிரதேசம் தரத்தில் மிகவும் குறைந்துள்ளது. அப்படிப்பட்ட அணிக்கு எதிராக பீகார் படைத்துள்ள சாதனைகளை கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்றால் மிகையாகாது.

- Advertisement -