எம்எஸ் தோனியின் ஆல்-டைம் வரலாற்று சாதனையை உடைத்த ஹர்மன்ப்ரீத் – தங்கப்பதக்கம் வென்று கொடுப்பாரா

MS dhoni Harmanpreet Kaur
- Advertisement -

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக போற்றப்படும் காமன்வெல்த் 2022 தொடர் இந்த வருடம் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் 20 ஓவர் போட்டிகளாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் தோல்வியடைந்ததால் வென்றே தீரவேண்டும் என்ற இந்நிலையில் தனது 2-வது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

IND vs Aus Womens Common Wealth Renukha Singh

- Advertisement -

பர்மிங்காம் நகரில் ஜூலை 31-ஆம் தேதியான நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டி மழையால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜாவேத் டக் அவுட்டானார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பிஸ்மா மரூப் மற்றொரு தொடக்க வீராங்கனை முனிபா அலியுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து 17 (19) ரன்களில் அவுட்டானார். அதே ஓவரிலேயே 3 பவுண்டரி 1 சிக்சருடன் முனீபாவும் 32 (30) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சோஹைல் 10, அயாஸ் 10 நசீம், ரியாஸ் 18 என முக்கிய வீராங்கனைகள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அசத்திய சிங்கப்பெண்கள்:
கடைசியில் வந்த வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்களில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் ஒரு கட்டத்தில் 51/0 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் 18 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபத்தை சந்தித்தது. பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 100 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நட்சத்திர தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் பவர் பிளேயில் அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டு 61 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர்.

IND vs Pak Common Wealth Games Womens

அதில் ஷபாலி வர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 8 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் அடித்து 63* (42) ரன்கள் விளாசிய நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா கடைசி வரை அவுட்டாகாமல் சூப்பர் பினிசிங் கொடுத்தார். அதனால் 11.4 ஓவரிலேயே 102/2 ரன்களை எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வாழ்வா – சாவா போட்டியில் அசத்தியது. இதனால் பார்படாஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வென்றால் அரையிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற நல்ல நிலைமைக்கு இந்தியா போராடி வந்துள்ளது.

- Advertisement -

தோனியை முந்தி:
முன்னதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீராங்கனை மிதாலி ராஜ்க்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நம்பிக்கை நட்சத்திரம் ஹர்மன்பிரீத் கவுர் இந்த தொடரில் இந்தியாவை வழிநடத்தி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தடுமாறியபோது அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் 52 ரன்கள் குவித்து காமன்வெல்த் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சரித்திரத்தை படைத்தார்.

harmanpreet 2

அந்த நிலைமையில் இப்போட்டியில் அவரது தலைமையில் இந்தியா வெற்றியை பதிவு செய்ததால் ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2012 முதல் பகுதிநேர கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கடந்த 2017 உலகக் கோப்பைக்கு பின் முழுநேர டி20 கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இதுவரை 71 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய மகளிரணி 42 வெற்றிகளை 61.76% என்ற சிறப்பான சராசரியில் குவித்து வருகிறது. 26 தோல்விகளைச் சந்தித்தது, 3 போட்டிகள் முடிவின்றி போனது.

harmanpreet

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி 41 வெற்றிகளை பதிவு செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த பட்டியல்:
1. ஹர்மன்பிரீத் கௌர் : 42*
2. எம்எஸ் தோனி : 41
3. விராட் கோலி : 30
4. ரோகித் சர்மா : 27

மேலும் ஏற்கனவே அவர் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார். எனவே இந்த காமன்வெல்த் போட்டிகளில் இதேபோல் இந்தியாவை வழிநடத்தி இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது

Advertisement