இறுதிப்போட்டியில் மோசமான தோல்விக்கு காரணம் இதுதான். எல்லோருக்கும் சாரி – கண்ணீர்விட்ட இந்திய கேப்டன்

Kaur
- Advertisement -

மகளிருக்கான டி20 உலக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறின. இதில் இந்திய அனி வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 85 ரன்கள் வித்யாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. போட்டிக்கு முன்னர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 ஓவர்களில் 184 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் இருவரும் 70 ரன்களுக்கு மேலு குவித்தனர். அடுத்து 185 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் நிலைகுலைந்து. ஷபாலி வர்மா 2 ரன்களுக்கும், மந்தனா 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி இறுதியில் 19.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது : நாங்கள் லீக் போட்டியில் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. இறுதிப்போட்டியில் நிறைய கேட்சுகளை தவறவிட்டோம். அதனால் அதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய அணி நிறைய ரன்களை குவித்தது. இதுவே தோல்விக்கு காரணம் என்று கூறினார்.

aus w

ஒரு அணியாக இன்னும் நிறைய சாதிக்க முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இனிவரும் போட்டிகளில் பீல்டிங்கில் முன்னேற்றம் காண்போம் என்று கூறினார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

Advertisement