சிக்சருக்கு சென்ற பந்தை ஒற்றை கையால் பறந்து பிடித்து அதியசயத்தை நிகழ்த்திய இந்திய பெண் கிரிக்கெட்டர் – வைரல் வீடியோ

Kaur

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பிடிக்கும் அபாரமான கேட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெறும். ஆண்கள் கிரிக்கெட் என்றால் வீரர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து தங்களது திறமையால் எவ்வளவு கடினமாக கேட்சாக இருந்தாலும் எளிதில் பிடித்து அதிசயம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஹர்மன்பிரீட் கவூர் நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆன்டிகுவாவில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிரணி வீராங்கனை அடித்த பந்து கிட்டத்தட்ட சிக்சருக்கு சென்று விட்டது என்று கூறவேண்டும்.

அந்நேரத்தில் பவுண்டரி லைனின் அருகில் இருந்து எகிறி தனது இடது கையால் அவர் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் ஒரு அதிசயமான நிகழ்வு என்று கூற வேண்டும் ஏனெனில் கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத ஒரு கேட்ச் பிடித்து அசத்தியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.