இதை 2022லயே முடிவு பண்ணோம்.. அக்காக்களிடம் செய்த நன்றி மறவாத செயல்.. பற்றி ஹர்மன்ப்ரீத் பேட்டி

Harmanpreet Kaur
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய அணி வென்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கிய போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து செமி ஃபைனலுக்குச் சென்றது. அங்கே 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கடைசியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் தோற்கடித்த இந்தியா முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அப்போட்டியின் முடிவில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் ஜாம்பவான் பவுலர் ஜுலன் கோஸ்வாமி ஆகியோரை ஹர்மன்பிரீத் மைதானத்துக்கு அழைத்தார். இந்தியாவுக்காக 20 வருடங்களுக்கும் மேலாக விளையாடிய அவர்கள் மகளிரணி வளர்ச்சி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்கள்.

- Advertisement -

2022லயே முடிவெடுத்தோம்:

குறிப்பாக இன்றும் மிதாலி ராஜ் அதிக (7805) ரன்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அதே போல மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக (255) விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை கோஸ்வாமி படைத்துள்ளார். இருப்பினும் 2005, 2017 ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்ற அவர்களால் இந்தியா தோற்றதால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

எனவே இறுதிப் போட்டியின் முடிவில் அவர்களை வரவைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கையில் கோப்பையைக் கொடுத்து இந்திய அணியுடன் வெற்றியைக் கொண்டாடினார். அதை கலங்கிய கண்களுடன் ஏற்றுக்கொண்ட மித்தாலி, கோஸ்வாமி இந்தியாவின் வெற்றியை ஆத்மார்த்தமாக கொண்டாடினர். இந்நிலையில் அதை 2022லேயே முடிவெடுத்ததாக கேப்டன் ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

நன்றி மறவாத ஹர்மன்ப்ரீத்:

“கடந்த முறை 2022 உலகக்கோப்பை முடித்து விட்டு நாங்கள் வீட்டுக்கு திரும்பிய போது அனைவரும் சோகமாக இருந்தோம். ஏனெனில் மித்தாலி, ஜூலன் அக்காக்களுக்கு அதுவே கடைசி உலகக்கோப்பை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்காக நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று நானும் மந்தனாவும் அமர்ந்து சோகத்துடன் பேசினோம்”

இதையும் படிங்க: இந்தியா ஜெய்க்கும் வரை இந்த தோல்வி பிரச்சனையில்ல.. 5வது டி20யில் ரிங்குவை சேர்த்த கேப்டன் சூரியகுமார் பேட்டி

“அப்போது வருங்காலத்தில் கோப்பை வெல்லும் போது அவர்களுக்கு இதை நாம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதற்காக அவர்கள் மைதானத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். நாங்கள் வெற்றி தருணத்தை அவர்களுடன் பிடிக்க விரும்பினோம். அவர்கள் மட்டுமின்றி டயானா எடுல்ஜி மேடம், சுபாங்கி குல்கரனி, சுதா ஷா ஆகியோரும் இருந்தார்கள். அவர்களுடனும் வெற்றியைப் பகிர்ந்து கொண்டது எங்களுக்கு சிறந்த தருணமாகும். அவர்கள் இல்லாமல் இத்தருணத்தை நாங்கள் காட்சிப்படுத்தியதில்லை” என்று கூறினார்.

Advertisement