இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடுகையில் 8.4 ஓவர்கள் முடிவில் 54 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்நேரத்தில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது 23 வயதான வீராங்கனை ஹர்லீன் டியோல் இங்கிலாந்து வீராங்கனை அடித்த பந்தினை சரியாக கணித்து கடைசி நேரத்தில் டைவ் அடித்து பிடித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 27 பந்துகளைச் சந்தித்த ஜோன்ஸ் 43 ரன்களை அடித்திருந்த வேலையில் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
A fantastic piece of fielding 👏
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
— England Cricket (@englandcricket) July 9, 2021
இந்த கேட்ச் விடீயோவை தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆண்கள் கிரிக்கெட்டில் இது போன்ற ஒரு கேட்ச் சாதாரணமான விடயமாக பார்க்கப்படும் வேளையில் மகளிர் அணியில் இது போன்ற ஒரு அற்புதமான கேட்ச் பிடித்தது தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.



