இப்படி செஞ்சா சும்மா விடமாட்டேன்.. ரசிகரை வெறியுடன் அடிக்க ஓடியது ஏன்? ஹரிஷ் ரவூப் விளக்கம்

Haris Rauf 2
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹரிஷ் ரவூப் ஒரு ரசிகரை அடிக்கச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக அமெரிக்காவிடம் முதல் போட்டியிலேயே தடுமாற்றமாக விளையாடிய பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்து அவமானத்தை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்கள் அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அதன் காரணமாக கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக கடைசி 2 போட்டிகளில் வென்றும் முதல் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

கோபத்தின் விளக்கம்:
இருப்பினும் பாபர் அசாம், ஹரிஷ் ரவூப் உள்ளிட்ட சில வீரர்கள் மட்டும் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக இன்னும் அமெரிக்காவிலேயே இருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் தன்னுடைய ஹோட்டல் அறைக்கு சென்ற ஹரிஷ் ரவூஃபிடம் ஒரு பாகிஸ்தான் ரசிகர் செல்ஃபி எடுக்க கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. அதை அவர் ஏற்காததால் அந்த ரசிகர் ஏதோ சொன்னதாகவும் தெரிந்தது.

அதனால் கோபமடைந்த ஹரிஷ் ரவூப் “எப்படி என்னுடைய அப்பாவை பற்றி பேசலாம். நீ இந்தியராகத் தான் இருப்பாய்” என்று சொல்லிக் கொண்டே அந்த ரசிகரை வேகமாக அடிப்பதற்கு ஓடினார். அதை அவருடைய மனைவி முடிந்தளவுக்கு தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதற்கு கட்டுப்படாத ஹரிஷ் ரவூப் அந்த ரசிகரை அடிக்க ஓடினார். நல்லவேளையாக அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் கைகலப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்தினர்.

- Advertisement -

இறுதியில் “நான் பாகிஸ்தானை சேர்ந்தவர். எங்களிடம் இப்படியா நடந்து கொள்வீர்கள்?” என்று அவரிடம் அந்த ரசிகர் அதிருப்தியை வெளிப்படுத்தியனார். இந்நிலையில் அந்த ரசிகர் தம்முடைய குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாலயே அடிப்பதற்குச் சென்றதாக ஹரிஷ் ரவூப் விளக்கமளித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இதை நான் சமூக வலைதளத்தில் எடுத்து வரக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா கண்டிப்பா விளையாடும் – காரணத்துடன் பிளமிங் கணிப்பு

“ஆனால் அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. எனவே அதைப் பற்றி விளக்க வேண்டும் என்று கருதுகிறேன். பொது நபரான நாங்கள் பொதுமக்களிடம் ஆதரவு அல்லது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் என்னுடைய குடும்பம் மற்றும் பெற்றோர்கள் என்று வரும் போது அதற்கு தகுந்தார் போல் பதிலடி கொடுக்க தயங்க மாட்டேன். யார் எந்த வேலை செய்தாலும் தங்களுடைய குடும்பத்தின் மீது மரியாதை காட்டுவது முக்கியம்” என்று கூறியுள்ளார்.

Advertisement