சி.எஸ்.கே அணியில் இடம் கிடைத்தது அதிர்ஷ்டம். எந்த இடத்திலயும் இறங்கி விளையாட ரெடி – தமிழக வீரர் அதிரடி

Nishanth
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வருடம் 14வது சீசனுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் 18ஆம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியை பலப்படுத்த சரியான வீரர்களை தேர்வு செய்து ஏலத்தில் எடுத்தனர். அப்படி இந்த வருட ஏலம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத விதமாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சரியான வீரர்களை ஏலத்தில் எடுத்து பலப்படுத்தும் வகையில் வீரர்களை தேர்வு செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் சற்று ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலேயே இருந்தனர்.

இருப்பினும் தமிழ்நாடு அணியின் இளம் வீரரான ஹரி நிஷாந்த்தை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்துள்ளது. அவரின் தேர்வு ஒரு சரியான தேர்வு என்றே கூறலாம். ஏனெனில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் ஹரி நிஷாந்த் அதிரடியாக விளையாடி கூடியவர். மேலும் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

nishanth 1

அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது சற்று அருமையான தேர்வு என்றே கூறலாம். இந்நிலையில் தான் சிஎஸ்கே அணியில் தேர்வானது குறித்து பேசிய அவர் : சென்னை அணிக்காக விளையாட இருப்பது அனைவருக்குமே ஒரு கனவு. அந்த கனவு தற்போது எனக்கு நிறைவேறி உள்ளது.

nishanth 1

சிஎஸ்கே அணிக்காக நான் தேர்வானது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அது மட்டுமின்றி சிஎஸ்கே அணிக்காக எந்த இடத்திலும் இறங்கி விளையாட நான் தயாராக உள்ளேன் என்று ஹரி நிஷாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement